யார் இந்த மெல்கிசேதேக்கு
Jeffersonville, Indiana, USA
65-0221E
1….ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைவணங்குவோமாக. அருமையான பரம பிதாவே, 'விசுவாசித்தால் மாத்திரம் போதும்' என்னும் பாட்டை நாங்கள் கேட்கும் போது, தேவனுடைய எந்த வாக்குத்தத்தத் தையும் சுதந்தரித்துக்கொள்ள அவைகளை விசுவாசித்தால் மாத்திரம் போதும் என்பதை அறிந்துக்கொள்ள செய்கிறது. ஏனென்றால் 'விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும் என்று எழுதியிருக்கிறது. சந்திரரோகியாய்க் கிடந்த தன் மகனைக் கொண்டு வந்தவன் “விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும் என்று சத்தமிட்டு சொன்னது போல் நாமும் சத்தமிட்டு சொல்லும்போது...
இந்தக் கடைசி நாட்களில், நீர் தந்திருக்கும் உம்மைக் குறித்த மகத்தான வெளிப்படுத்துதலுக்காகவும், உம்முடைய வல்லமைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இக்காலத்திற்கு வாக்குரைத்திருக்கிறதுப்போல, கடந்த நாட்களில் தாம் ஜீவனுள்ளவர் என்பதை சரீரப்பிரகாரமாகவும், உணரக்கூடிய சான்றுகளாலும் உறுதிப்படுத்தின ஜீவனுள்ள தேவனோடு நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என்பதை அறியும் போது இது எங்கள் இருதயத்தை வெகுவாக சந்தோஷிப்பித்து மகிழ்விக்கிறது. எங்கள் தேவனாகிய உமக்கு நாங்கள் அதிக நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். எப்பாதையில் செல்வது என்று யாரும் அறியாதிருக்கும் இந்த இருண்ட காலத்தில் பாதுகாப்பான புகலிடத்தை நாங்கள் கண்டுக் கொண்டதால் அதிகமாக மகிழ்ச்சியுறுகிறோம்.
ஆண்டவரே, இந்த இரவிலே நாங்கள் உமது வார்த்தையை பேசும்போது எங்களை ஆசீர்வதியும். எங்களுக்கு அருளப்பட்டிருக் கும் வாக்குத்தத்தங்களை எங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டு அவைகளை பயபக்தியுடன் பாதுகாத்து உண்மையான தேவ ஒழுக்கத்துடன் அவைகளுக்கு கீழ்ப்படிவோமாக. இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம், ஆமென்.
2(யாரோ ஒருவர் “சகோ. பிரன்ஹாமோடு பேசுகிறார் - ஆசி) ஒரு அன்பின் காணிக்கை? நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது. யார் அதை செய்தது? குற்றம் செய்த நீ? எனக்காக ஒரு அன்பின் காணிக்கை எடுத்ததாக மேலாளர் கூறினார். அவர் அதைச் செய்திருக்கக்கூடாது. நான் அதைப் பாராட்டுகிறேன் என்பதை தேவன் அறிவார்; ஆனால், நான் அதற்காக வரவில்லை. உங்களுக்கு நன்றி . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! அதை வெளி ஊழியத்திற் கென்று கொடுத்துவிட எதை செய்ய முடியுமோ அதை செய்வேன். அப்பொழுது தான் அது தேவனுடைய ராஜ்யத்திற்கு செல்லும் என்பதை நான் அறிவேன். இந்த வாரம் நீங்கள் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் இதே சுவிசேஷத்தை கொண்டு செல்ல, கர்த்தருக்கு சித்தமானால் நானே வெளிநாட்டிற்கு எடுத்துச்செல்லுவேன். நீங்கள் விசுவாசித்தப்படியே அது செய்யப்படும் என்பதனை அப்பொழுது நான் அறிவேன். கர்த்தாவே, நான் அதை செய்ய உதவிபுரியும்.
இந்த வாரம் அநேகராக கூடி இருப்போருக்கும், தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டுள்ள எல்லா மக்களுக்கும் நான் அதிக நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.
3இன்று காலை பில்லி (Billy) என்னைப் பார்த்து, ''அப்பா, இக்காலையில்பொழுது விடிந்த உடனே நீர் என்னுடன் வந்திருந்தால், இந்த சுற்றிலுமுள்ள இடங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை கார்களில் வைத்துக் கொண்டுபோஷித்துக் கொண்டிருப்பதையும், கதவுகள் திறக்கப்படுவதற்காக மக்கள் பரிதாபமாக மழையில் நின்று காத்துக் கொண்டிருப்பதையும் கண்டிருப்பீர்கள்'' என்று கூறினான். இவ்விதமான சூழ்நிலையின் மத்தியில், சத்தியமில்லாத தொன்றை நான் கூறினால் நான் ஒரு கொடிய மாய்மாலக்காரனாய் இருப்பேன். சில சமயங்களில் நான் உங்கள் மனதை புண்படுத்துகிறவனாய் இருக்கிறேன். நான் அவ்விதம் செய்யவேண்டும் என்பது என்னுடைய நோக்கமல்ல. நானல்ல, சத்தியமே உங்கள் மனதை உருவாக்குத் துகிறதாய் இருக்கிறது. நான் உங்களுக்கு உதவிச்செய்ய என்னால் எதைச் செய்ய முடியுமோ அதை உங்களோடு இருந்து அதிக உத்தமமாய் செய்கிறேன். இதனால் தான் நீங்கள் இங்கே வருகிறீர்கள் என்பதை விசுவாசிக்கிறேன். கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
4மக்களின் அருமையான ஒத்துழைப்புக் காகவும், இப்பள்ளிக்கூட மண்டபத்தை நமக்கு வாடகைக்கு தந்திருக்கும் இந்த நகரத்தின் மக்களுக்கும் இப்பொழுது நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதிகாரிகள் இங்கிருப்பீர்களென்றால் உங்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த அரங்கத்தை நாம் பெற்றுக்கொள்ளவும், ஒவ்வொரு இரவும் நம்முடன் இருந்து உதவி செய்து வருகிறவரும் இவ்விடத்திற்கு பாதுகாப் போனுமாக இருக்கும் ஹிஸ்டன் கோல்வின் என்பவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இங்கு வந்து மிக குறைந்த கட்டணத்தில் காவல் காத்த ஜெபர்ஸன்வில் காவல் படையினருக்கு நாம் நன்றி செலுத்து கிறோம். எவ்வித குழப்பம் ஏற்படாமலும், 'கார்கள் ஒழுங்காக நிறுத்தப்படுகின்றனவா என்று கவனிக்கும் விசேஷித்த வேலைக்காக ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டாலர்கள் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாம் ஒழுங்காக இருந்தது. அதற்காக மக்களுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இங்கிருந்து இவைகளை கவனித்து வரும் பொறியாளர், அவரை நான் கவனித்திருக்கிறேன். மற்றும் இவைகளுடன் சம்பந்தப்பட்ட அனைவருக் கும் நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம்.
5அன்பளிப்புக்காக உங்கள் ஒவ்வொரு வருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இந்த மத்தியானம் பில்லி அன்பளிப்பை என்னிடம் கொண்டு வந்தான். அவைகள் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தவைகளும் இனிப்புகளும் மற்றும் வேறு பொருட்களாய் இருந்தன. அவைகளில் ஒன்று, கிறிஸ்துவின் சித்திரம் வரைந்து மலைப் பிரசங்கம் எழுதப்பட்டதாய் இருந்தது. அது உண்மையிலேயே அழகாக இருந்தது. நான் உண்மையிலேயே உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்படி உங்களுக்கு நன்றியை தெரிவிப்பது என்று அறியாதிருக்கிற அநேக காரியங்கள் இருக்கின்றன. நீங்கள் முன் நின்று பண உதவிச் செய்து கூட்டத்தை ஒழுங்கு செய்ததை நாங்கள் உண்மையிலேயே எங்கள் முழுமனதார பாராட்டுகிறோம். கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக.
அநேகர் தனிப்பட்ட முறையில் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டி ருந்தார்கள் என்று பில்லி கூறினான். சிறு குழந்தைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அநேகர் கேட்டார்கள். ஓ, நான் அதை செய்ய எவ்வளவு வாஞ்சையா யிருக்கிறேன்!
ஆனால், இந்த முறை வந்திருக்கும்போது இவ்விதமான செய்தியைக் கொண்டு வர முழு நேரமும் வார்த்தையை வாசிப்பதிலும் ஜெபிப்பதிலும் நிலைத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்செய்திகள் நமக்கு அசாதாரணமான வைகள்; ஏனென்றால் இவைகள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும், இது மாத்திரமல்லாமல் எதை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவனை கேட்டு அவருடைய சித்தத்தை அறிந்த பிறகுதான் இவைகளை சொல்ல வேண்டும்.
6கர்த்தருக்கு சித்தமானால், ஒருநாளை தெரிந்துக்கொண்ட பிறகு நாங்கள் மீண்டும் சீக்கிரமாக திரும்பிவருவோம். நான் 'ஈஸ்டரைக் குறித்து ஏதோ சொன்னேன். அந்தநேரத்தில் கலிபோர்னியாவில் ஒரு ஒழுங்கு செய்திருப்பதால், நான் அதை சரியா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வேளை அது தவறாக இருக்கக் கூடும். எப்படி இருப்பினும் இக்கூடாரத்திற்கு திரும்பவும் வரும்போது நாங்கள் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறோம். சபையானது உங்களுக்கு அந்த நாளையும் நேரத்தையும்அறிவிக்கும்.
ஒருவேளை அந்த நேரத்தில் வியாதியஸ்தருக்கு ஜெபிக்க எந்த நேரத்தையும் நான் குறிக்கவில்லை. மக்களைக் கொண்டுவந்து அவர்களுக்கு ஜெபிக்க ஒரு ஆராதனையும் நாம் ஒழுங்கு செய்யவில்லை. அவர்களை அனுப்பிக் கொண்டே இருந்தோம். சகோதரன். லீ வேயில் மற்றும் சகோதரன்...பிரசங்கித்துக் கொண்டே இருந்தனர். வார்த்தையை வாசிப்பதில் மாத்திரம் நிலைத்திருக்க என்னை விட்டுவிட்டு, மற்ற சகோதரர்கள் பிரசங்கித்துக் கொண்டும், வியாதியஸ்தருக் காக ஜெபித்துக்கொண்டும், ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டும் இருந்தனர். இந்த சகோதரர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். அவர்கள் ஒரு வீரச்செயலை செய்திருக்கிறார்கள்.
7நான் சந்திக்க விரும்பும் அநேக நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள். ஜான், மற்றும் ஏர்ல் (Earl) இவர்களை நான் பார்த்தேன். டாக்டர் லீ வேயில், இக்கூட்டத்தின் மேலாளர்களில் ஒருவரான சகோதரன் ராய் பார்டர்ஸ் இவர்களும் இருக்கின்றனர். இவர்களுடைய கைகளை குலுக்கினதோடல்லாமல் இவர்களுகளுடன் பேசக்கூட நேரமில்லை. அவ்வித தருணம் எனக்கு கிடைக்கவில்லை. கென்டக்கியி லிருந்து வந்திருக்கும் என்னுடைய நண்பர்கள் மற்றும் ஊழியர்க ளாகிய நண்பர்கள் இவர்களுடைய கைகளை குலுக்க நான் எவ்வளவாக வாஞ்சிக்கிறேன். அன்றொரு நாள் சகோதரன். ப்ளேயரை (Blair) இங்கு பார்த்தேன். நான் நேசிக்கும் இவர்களில் அநேகர் அநேக கூட்டங்களுக்கு வந்திருக்கிறார்கள், அவர்களுடைய கைகளைக் கூட நான் குலுக்க முடியாமல் போயிருக்கிறேன். நான் அவ்விதம் செய்யக் கூடாது என்பதற்காக அல்ல; அவ்விதம் செய்ய நேரம் இருக்கவில்லை. நான் துரிதமாக செல்ல வேண்டியிருக்கிறேன்.
8குழந்தைகளை பிரதிஷ்டை செய்வ தைக்குறித்து, என்னுடைய சிறிய பேரப்பிள்ளையையும் இக்கூட்டத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டி இருந்தது. சிறிய டேவிட் (David)- ஐ பிரதிஷ்டை செய்ய எனக்கு நேரமில்லை. நான் இப்பொழுது இரண்டாவது முறையாக தாத்தாவாக இருக்கிறேன். மிஸ்டர் மே (Mr. May) இந்த இரவு இங்கிருப்பாரானால், நான் வெகு விரைவில் உபயோகப்படுத்த வேண்டும் போல் அவர் எனக்கு ஒரு பிரம்பு கைத்தடியை கொடுத்தார். ஆகவே...
நான் பில்லியை பார்த்து, ''நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள் என்று வேதம் கூறியிருப்பது உண்மை தான். ஆனால் முழு பாரமும் உன் மீது வைக்கப்படவில்லை'' என்று கூறினேன். இந்தப் பேரப்பிள்ளைகள் வேகமாக தோன்றுகிறார்கள்.
என்னுடைய மருமகள் முதலில் மலடியாக இருந்தாள். அவளுக்கு பிள்ளைகள் இருந்திருக்க முடியாது. ஒரு நாள் கூட்டத்தை விட்டு செல்லும் போது, “லாய்ஸ், நீ ஒரு குமாரனைப் பிறப்பாய். கர்த்தர் உன்னை ஆசீர்வதித்திருக்கிறார். உன்னுடைய பெண்மைக்குரிய குறைவு நீங்கி விட்டது,'' என்று கர்த்தர் என்னிடம் கூறினார். ஒன்பது மாதங்கள் கழித்து சிறிய பால் பிறந்தான்.
9இந்தக் குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு, ஒருநாள் காலை, காலை உணவை மேஜையில் அருந்திக் கொண்டிருந்தேன். லாய்சும், பில்லியும் மேஜையில் எனக்கு முன்பாக உட்கார்ந்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது லாய்ஸ் ஒரு குழந்தையை இளஞ் சிவப்பு அல்லது நீல நிற கம்பளியால் சுற்றியிருக்கும் ஒரு சிறு குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். பில்லி ஒரு மூலையில் உட்கார்ந்துக் கொண்டு சிறிய பால் (Paul)க்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். நான் பில்லியைப் பார்த்து, “பில்லி, நீல நிற கம்பளியினால் சுற்றப்பட்டிருக்கும் ஒரு குழந்தைக்கு லாய்ஸ் பால் கொடுத்துக் கொண்டிருப்பதை இப்பொழுது தான் ஒரு தரிசனத்தில் கண்டேன்'' என்றேன்.
அதற்கு அவன், “நான் வேட்டையாட போகவேண்டி இருக்கும். அதற்கு இப்பொழுதிலிருந்து இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன'' என்று கூறினான்.
பதினோறு மாதங்களுக்குப் பிறகு சிறிய டேவிட் பிறந்தான். நான் இன்னும் அவனை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்ய முடிய வில்லை. நாங்கள் மீண்டும் வரும்வரை அதை செய்ய முடியாது. ஆகவே, அது நாங்கள் எந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ள செய்கிறது.
10மக்களையும், அவர்களின் ஐக்கியத் தையும் நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆனால் நம்முடைய சகோதரர்கள் வியாதியஸ்தருக் காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெற்றிகரமாக நடந்தேறுகிறது என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு இரவும் நாங்கள் வியாதியஸ்தருக்காக, ஒருவர் கைகளை மற்றவர்கள் மேல் வைத்து ஜெபித்தோம். எல்லோரும் பயனடைய இவ்விதம் செய்யப்பட்டது. நாங்கள் திரும்பவும் வரும் போது இரண்டு அல்லது மூன்று நாட்களை வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்காகவும் மற்றும் அவ்விதமான காரியங்களுக்காகவும் ஒதுக்கிவைக்க விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் இதை கடிதங்களில் தெரியப்படுத்துகிறோம். மக்கள் செய்த உதவிக்காக மீண்டும் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்.
11காலையில் கொடுத்தச் செய்தியை குறித்துசற்று விளக்கம் கூற விரும்புகிறேன். அச்செய்தியை நான் முற்றிலுமாக அளிக்க வில்லை என்பதைக் குறித்து சந்தேக மில்லை, ஆனால் நீங்கள் அதை புரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நான் எதற்காக அவ்விதம் செய்தேன் என்பதை உங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
அது உங்களுக்கு மிகவும் எளிதாக தோன்றலாம். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். சிலக் காரியங்களை அறிவிக்க நீங்கள் தேவனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளுகிறீர்கள். நான் அவ்விதம் செய்வதற்கு முன் அது தேவனிடத்தில் இருந்து ஒரு உத்தரவாக வரவேண்டும். அவரே இறங்கி வந்து தம்மை பிரத்தியட்சமாய் காண்பித்து வெளிப்படுத்தலை தந்தார். ஆகவே, நான் இப்பொழுது சொன்னக் காரியங்கள் சபைக்கு மாத்திரம் சொல்லப்பட்டது.
அணில்கள் இல்லாதிருந்தபோது, ''நீ பேசு , அப்பொழுது அணில்கள் உண்டாகும்'' என்று கூறின அதே தேவன் தான் இப்பொழுதும் வெளிப்படுத்தினார் என்பதை நீங்கள் அறிந்து நம்புவதற்காக இவ்விதம் கூறினேன். மூன்று முறை இவ்விதமாக நடந்திருக்கிறது. இல்லாததை, வார்த் தையைக் கொண்டு சிருஷ்டித்தார் என்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே இது எவ்வளவாக உறுதிப்படுத்தப்பட்டதாய் இருக்கும். பூமி அதிர்ந்ததையும், அக்கினி ஸ்தம்பத்தில் இருந்து சத்தம் உண்டானபோது அச்சத்தத்தைக் கேட்காவிட்டாலும் இவைகளை காணத்தக்கதாக மக்கள் தன்னுடன் இருந்தார்கள் என்று பவுல் கூறினதுப்போல இவைகளையும் பார்க்கத் தக்கதாக மக்கள் அங்கிருந்தனர்.
12எல்லாம் முடிந்த பிறகு புருஷர்களும், மனைவிகளும் உண்மையான கிறிஸ்தவர் கள் செய்யும் முறைப்படி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டும், அழுதுக் கொண்டும் இருப்பதை காண்பது எனக்கு சந்தோஷத்தை தந்தது.
கவனியுங்கள் நண்பர்களே, தேவன், தம்முடைய வார்த்தையை சரி என்று நிரூபிக்க அடையாளங்களினாலும், உறுதிப் படுத்தல்களினாலும் நிரூபிக்கிறார், உரைக்கப்பட்ட வார்த்தை! அந்த மேகத்தில் இருந்த அதே ஒளிதான் வெளிப்படுத்தலை தந்தது என்பதை நினைவுகூருங்கள்.
ஒரு நாள் மேகமில்லா ஆகாயத்தில் இந்த மேகம் மஞ்சள் நிறமாக (Amber Fire) பற்றியெரியும் அக்கினியுடன் மேலே போவதும் கீழே வருவதுமாக இருந்ததை என் மகள் சாராள் படிக்கும் பள்ளிக்கூடத் தினர் பார்த்துக் கொண்டிருந்ததை என் மகள் என்னிடம் கூறிக்கொண்டிருந்தாள். ஆசிரியர் பள்ளிக் கூடத்தை மூடி விட்டு பிள்ளைகளை வெளியே கொண்டுவந்து அந்த மேகத்தை காண்பித்து, ''நீங்கள் எப்பொழுதாவது இப்படி பார்த்ததுண்டா?'' என்று கேட்டிருக்கிறார்கள்.
அந்த கன்மலை மேல் இருந்த அதே மஞ்சள் நிற ஒளிதான் அந்த ஒளி என்பதை நினைவு கூருங்கள். ஆகவே, அதே தேவன், அதே வெளிப்படுத்தல்.''அவர்கள் இதை செய்யச் சொல்'' என்று கூறினார். அதைதான் இன்று காலை நான் உங்களிடம் கூறினேன்.
13என்னுடைய நல்ல நண்பரான சகோதரன் ராய்ராபர்சன், டூசான் (Tucson) னில் இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பாரா னால்,“ராய், அன்றொரு நாள் நாம் மலை மீது நின்றுக் கொண்டிருப்பதாக தரிசனங் கண்டீரே? அப்பொழுது அந்த மேகம் மேலே இருப்பதையும் நீர் என்னிடத்தில் வந்ததையும், அப்பொழுது அவர் உன்னிடம் கூறினதையும், அன்று நான் வீட்டில் உன்னிடம் கூறினதையும் நினைவுக் கூரவும். ராய், அது தான் இது. மகனே, நீர் இனிமேல் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம்; எல்லாம் முடிந்து விட்டது.''
அது என்ன என்பது உங்களுக்குத் தெரியாது. அதுதான் கிருபை அவர் உன்னை நேசிக்கிறார். நீயும் அவரை நேசி! உன்னுடைய மீதியான நாட்களில் அவரை தாழ்மையுடன் பணிந்து தொழுதுக்கொள். சந்தோஷமாய் இரு. நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே முன்னேறி செல். நீ சந்தோஷமாய் இருந்தால் அவ்வண்ணமே தொடர்ந்து செல். செய்த தவறையே மீண்டும் செய்ய வேண்டாம். முன்னேறிச் செல். இது தேவனுடைய கிருபை
14இப்பொழுது, நாம் வார்த்தைக்குள் செல்லும் முன் மீண்டுமாக ஜெபிக்க நான் விரும்புகிறேன். எத்தனை பேர் எனக்காக ஜெபிப்பீர்கள்? ஒரு கூட்டத்தில் இருந்து மறு கூட்டத்திற்கு செல்லுகிறேன், எனக்காக ஜெபிப்பீர்களா? நாம் வார்த்தைக்கு செல்லும் முன் நாம் எல்லோருமாக ஒரு சிறிய பாட்டை பாட விரும்புகிறேன். நாம் தேவனை அறிந்திருக்கிறோம் என்பதற்காக... ஒரு சிறிய பிரதிஷ்டை.
''அவர் உன்னை விசாரிக்கிறார்“ என்னும் இச்சிறிய பாடலை நீங்கள் எப்பொழுது தாவது கேட்டிருக்கிறீர்களா? சூரிய வெளிச் சத்தின் மூலமாகவோ அல்லது நிழலின் மூலமாகவோ அவர் உன்னை விசாரிக்கிறார்.
ஒரு ஸ்திரீ பியானோவினிடத்திற்கு வருகிறாள். இந்தப் பெண்ணுக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். இவள் யார் என்று எனக்கு தெரியவில்லை. இங்கிருக்கும் உதவிக்காரரான ஒருவரின் மகள், சகோதரன். வீலர் என்பவரின் மகள். இப்பொழுது வளர்ந்து விட்டிருக்கிறாள். சிறிது காலத்திற்கு முன் என்னுடைய தொடையின் மேல் உட்கார்ந்த சிறிய பெண்ணாக இருந்தாள். இப்பொழுது அவள் ஒரு வாலிப ஸ்திரீயாக இருக்கிறாள். இசையில் இருக்கும் அவளது தாலந்தை உபயோகப்படுத்துவதற்காக உண்மையிலேயே நான் அவளுக்கு நன்றி கூறுகிறேன். இப்பொழுது வெகு இனிமையாக அவள் வாசிக்கிறாள், 'சகோதரியே, நாம் பாட பியானோவை இசைப்பாயாக!'' எல்லோரும் சேர்ந்து பாடுவோமாக.
அவர் உன்னை விசாரிக்கிறார்
அவர் உன்னை விசாரிக்கிறார்
சூரிய வெளிச்சமாயினும் அல்லது நிழலாகிலும்
அவர் உன்னை விசாரிக்கிறார் நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? நாம் அதை மறுபடியும் ஒன்றாகப் பாடுவோம்
அவர் உன்னை விசாரிக்கிறார் அவர்
உன்னை விசாரிக்கிறார்
சூரிய வெளிச்சமாயினும் அல்லது நிழலாகிலும்
அவர் உன்னை விசாரிக்கிறார்
சகோதர். டயச், அவர் உங்களுக் காகவும் கூட செய்கிறார் சகோதரனே. நீர் அவரை நேசிக்கவில்லையா?
இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம்.
15அருமையான கிருபையுள்ள தேவனே, காலையில் கூறினதை மீண்டுமாக மக்களுக்கு எடுத்து கூறுவதற்கு சில காரியங்களின் - குறிப்புகளை இங்கே கொண்டு வந்திருக்கிறேன். இதை கேட்பதற்காக மக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். தேவன் மக்களை நேசிக்கிறார் என்பதையும் அவர்களுக்காக அக்கறை உள்ளவராக இருக்கிறார் என்பதையும் மக்கள் காணும்படியாக நீர் செய்யவேண்டுமாய் தேவனே, உம்மை நோக்கி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, நான் அதை அவர்களுக்கு தருவதில்லை; அது சத்தியம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தரப்படுகிறது. ஆகவே, அன்புள்ள தேவனே, உம்முடைய அன்பு எப்பொழுதும் மக்களிடையே இருக்கவேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். இன்று இரவு இக்கூட்டத்திற்குப் பின் எங்கள் வெவ்வேறு வீடுகளுக்குச் செல்ல பிரிய வேண்டியிருப்பது எங்கள் உள்ளத்தில் அதிக வருத்தமாய் இருக்கிறது. கர்த்தாவே, இந்த மக்களை ஆசீர்வதிக்க வேண்டுமாய் உம்மை வேண்டுகிறேன்.
நாங்கள் இப்பொழுது எழுதப்பட்ட வார்த்தையை ஜெபத்துடன் அணுகும்போது நீர் தாமே இந்த எழுதப்பட்ட வார்த்தையை இன்றிரவு எங்களுக்கு உயிர்ப்பித்து தர வேண்டுமாய் உம்மை வேண்டுகிறோம். இன்றிரவு எங்கள் வீடுகளுக்குச் செல்ல இக்கட்டிடத்தை விட்டு வெளியேச் சென்று பிரிந்து போகும்போது, எம்மாவு ஊரிலிருந்து வந்தவர்கள் கர்த்தரோடு நடந்து சென்ற போது அவரை அறியாதிருந்தும் அவர்கள் பெற்ற அனுபவத்தைப் போலவே நாங்களும் பெற்று அவர்கள் கூறினது போல நாங்களும் கூற கிருபை செய்தருளும். அன்றிரவு அவர்கள் அறைக்குள் சென்று கதவை அடைத்த பிறகு, அவர் சிலுவையில் மரிப்பதற்கு முன் செய்தது போலவே ஏதோ ஒன்றை செய்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
இன்றிரவு கதவு அடைக்கப்பட்டு உம்முடைய சிறிய மந்தை உமக்கு காத்திருக்கும் போது, கர்த்தாவே, நீர் மீண்டும் அதை செய்வீராக. பிதாவே, நாங்கள் எங்கள் வீடுகளுக்கு செல்லும்போது ''வழியிலே, அவர் நம்முடனே பேசினபோது நம்முடைய இருதயம் கொழுந்து விட்டு எரியவில்லையா?' என்று அவர்கள் கூறினப்படியே நாங்களும் கூற அருள் செய்தருளும். நாங்கள் எங்களையும் எல்லாவற்றையும் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். கர்த்தாவே, உம்முடைய சித்தப்படி எங்களுக்கு செய்தருளும். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
16இப்பொழுது சீக்கிரமாக ஆராதனைக்குள் செல்லுவோமாக. என்னோடு கூட எபிரெயர் புஸ்தகத்திற்கு வேதத்தை திருப்புங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு இச்செய்தியின் வேறொரு வெளிப்படுத்தலைக்குறித்து சிறிது நேரம் பேசுவோம். எபிரெயர் 7:1-3 வரை வாசித்து அதைக் குறித்து விளக்கம் கூறும் போது ... கர்த்தர் என்ன செய்வாரோ நாம் அறியோம். நமக்கு தெரியாது. விசுவாசித்து, விழித்திருந்து ஜெபிப்பது மாத்திரமே நாம் செய்கிறோம். அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாய் அவர் செய்கிறார் என்று விசுவாசிக்கிறோம். ஏனென்றால் அவ்வாறு அவர் வாக்குரைத்திருக்கிறார்.
“இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டு போய், அவனை ஆசீர்வதித்தான்.
இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கி சேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்.
இன்னும் சற்று வாசிப்போமாக.
இவன் தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனா யிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்''
17இந்த உயர்ந்த மனிதன் எவ்வளவு பெரியவனாய் இருக்கிறான் என்பதை கவனியுங்கள்.... “யார் இந்த மனிதன்?'' என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வி. வேதசாஸ்திரிகள் வெவ்வேறான கருத்துக்களை கொண்டுள்ளார்கள். நமக்கு இரகசியமாக இருந்த அந்த தேவ ரகசியமான புஸ்தகமாகிய ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டதிலிருந்து... வெளி. 10:1-7வரை படியுங்கள். இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாதே வரகசியங்களும், சீர்திருத்தக்காரர்களின் காலத்தினூடாக மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள், கடைசி சபையின் தூதன் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டியதா யிருக்கிறது. அது சரியென்று எத்தனைப் பேர் அறிவீர்கள் (சபையார் ”ஆமென்'' என்கின்றனர் -ஆசி) அது சரிதான். இரகசிய புஸ்தகத்திலுள்ள எல்லா தேவ இரகசியங்களும் லவோதிக்கேயா செய்தியாளனுக்கு வெளிப்படுத்தப்படும்.
இந்த மனிதனைக் குறித்து அநேக வாக்குவாதங்கள் இருப்பதால், எல்லாவற்றையும் ஆராய்ந்துப்பார்த்து இவன் யார் என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கிறது. இவனைக் குறித்து அநேக போதகங்கள் இருக்கின்றன.
இவன் உண்மையிலேயே ஒரு மனிதன் இல்லையென்றும், இவனைக் குறித்தக் காரியங்கள் வெறும்புராணக் கதையென்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். ''மெல்கிசே தேக்கு ஆசாரியத்துவம்' என்கிறபடி இது வெறும் ஆசாரியத்துவம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.
அது அவ்விதம் இருக்கமுடியாது. ஏனென்றால் நான்காம் வசனத்தில் இவனை ஒரு மனிதனாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, இவன் ஒரு ஆளாக இருப்பதற்கு இவன் மனித உருவம் உள்ளவனாக இருக்க வேண்டும். வெறும் ஒரு பதவியல்ல, ஒரு புராணக்கதையும் அல்ல ஆனால் அவன் ஒரு மனிதன்.
18இவன் ஒரு மனிதன். இந்த மனிதன் நித்தியமாய் இருக்கிறான். இவனுக்கு தகப்பனோ, தாயோ கிடையாது; இவனுக்கு துவக்கமோ முடிவோ இல்லை. இவன் இன்றிரவு ஜீவனுடன் இருக்கிறான். ஏனென்றால் இவனுக்கு தகப்பனோ, தாயோ இல்லாமல் துவக்கமோ முடிவோ இல்லாதவனாய் இருக்கிறான் என்று வேதம் கூறுகிறது. ஆகவே, அவன் ஒரு நித்திய ஆளாக இருக்க வேண்டும். அது சரியா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி) ஒரு நித்திய நபர். ஆகவே, அது தேவனாக மாத்திரம் இருக்கக் கூடும். ஏனென்றால் தேவன் ஒருவர் மாத்திரமே நித்தியமான வராய் இருக்கிறார்.
1தீமோத்தேயு6:15, 16. இவ்வசனங்களை நீங்கள் வாசிக்க வேண்டுமென விரும்புகிறேன். அவர் தேவனாய் இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. ஏனென்றால் அவர் ஒருவர் மாத்திரம் மரணமற்றவராய் இருக்க முடியும். தேவன் ஒரு மனிததேகம் உள்ளவராக தன்னை மாற்றிக்கொண்டிருக் கிறார். இவர், தகப்பனோ, தாயோ இல்லாதவரும், துவக்கமோ, முடிவோ இல்லாதவராய் இருக்கிறார்.
19மூன்று ஆட்கள் கொண்ட தேவத்துவத்தை அநேக மக்கள் வேதத்திலிருந்து போதிக்கிறார்கள். ஒரு ஆள் இல்லாமல் ஒரு மனித உருவம் இருக்கமுடியாது. ஒரு மனித உருவம் உண்டாவதற்கு ஒரு நபர் இருக்க வேண்டும்.
சில வாரங்களுக்கு முன் ஒரு பாப்டிஸ்ட் போதகர் என்னிடம் வந்து ''உங்களுக்கு சமயம் இருக்கும் போதுதே வத்துவத்தைக் குறித்து உங்களை சீர்படுத்த விரும்புகிறேன்'' என்று கூறினார்.
அதற்கு நான் இப்பொழுதே எனக்கு சமயம் இருக்கிறது, ஏனென்றால் நான் இதில் சரியாய் இருக்க வாஞ்சிப்பதினால் மற்றெல்லாக் காரியங்களையும் ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விடலாம் என்றேன்.
அவர் என்னிடம் வந்து சகோதரன் பிரன்ஹாமே, நீர், ஒரே ஒரு தேவன் இருப்பதாக போதிக்கிறீர்'' என்றார்.
அதற்கு நான், 'ஆம், ஐயா“ என்றேன்.
அதற்கு அவர், ''நல்லது, ஒரு தேவன் என்பதை நான் விசுவாசிக்கிறேன், ஆனால் ஒரு தேவன் மூன்று உருவங்களில் இருக்கிறார்'' என்றார்.
நான்,''ஐயா, அதை மறுபடியும் சொல்லுங்கள்'' என்றேன்.
அதற்கு அவர், “ஒரு தேவன் மூன்று ஆட்களில் இருக்கிறார்” என்றார்.
அதற்கு நான்,''எந்தப் பள்ளிக்கூடத்திற்கு சென்றீர்கள்?'' என்றேன். அதற்கு அவர் ஒரு வேதாகம கல்லூரியைக் கூறினார். அதற்கு நான், ''நான் அதை நம்புகிறேன். நீர், ஒரு ஆள் உருவமாகயில்லாமல் ஒரு ஆளாக இருக்க முடியாது. நீர், ஒரு சரீர உருவமாக இருக்கிறீர் என்றால் உங்களுக்கென்றே ஒரே சரீர உருவமாக இருக்கிறீர். நீர், ஒரு தனிப்பட்ட நபராக இருக்கிறீர்'' என்றேன்.
அதற்கு அவர், “வேத சாஸ்திரிகள் கூட இதை விளக்கிக் கூற முடியவில்லை'' என்றார்.
''இது வெளிப்படுத்தலினால் வந்தது என்றேன்.
அதற்கு அவர், ''நான் வெளிப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
அதற்கு நான், ''தேவன் அதை உமக்கு அளிக்க வேறு வழி இல்லை. ஏனென்றால் ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்து பாலகருக்கு வெளிப்படுத்துகிறார் வெளிப்பாடு தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளுகிற பாலகருக்கு வெளிப்படுத்துகிறார்'' என்றேன். ''தேவன், அதை உமக்கு அறிவிக்க வேறு வழி இல்லை; ஏனென்றால் நீ உன்னை தேவனிடத்திலிருந்து விலக்கி உன்னையே மூடிக்கொள்ளுகிறாய்.''
முழு வேதாகமமே தேவனுடைய வெளிப்படுத்தலாகும். முழு சபையுமே தேவனுடைய வெளிப்படுத்தலின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. வெளிப்படுத்தல் இல்லாமல் தேவனை அறிந்துக்கொள்ள வேறே வழியில்லை. 'குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக் கிறாரோ அவனுக்கு வெளிப்படுத்துகிறார். எல்லாமே வெளிப்படுத்தலில்தான் இருக்கிறது. வெளிப்படுத்தலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீ ஒரு குளிர்ந்துப்போன வேதசாஸ்திரியாய் இருக்கிறாய். உமக்கு எந்தவித நம்பிக்கை யுமே கிடையாது என்றேன்.
20இப்பொழுது, இந்த மனிதன் தகப்பனோ, தாயோ இல்லாதவரும், நாட்களின் துவக்கமோ, அல்லது முடிவோ இல்லாதவராய் இருக்கிறார் என்பதைக் காண்கிறோம். அது தான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கும் என் மார்பி (Enmorphe) தேவனாகும்.
Enamorphe என் மார்பி என்னும் கிரேக்க வார்த்தைக்கு 'உருவத்தை மாற்றிக் கொள்ளுதல்' என்பது அர்த்தமாகும். ஒரு ஆள் உருவத்திற்குள் அவர் தன்னை மறைத்துக்கொள்ளுதல்... ஒரு நாடகத்திலே, ஒரு நடிகன் வேறொரு பாத்திரமாக நடிக்க தன்னுடைய வேஷத்தை மாற்றிக்கொள்ளுதல் - இதுதான் 'Enamorphe' என் மார்பி என்னும் கிரேக்க வார்த்தையின் அர்த்தமாகும்.
பள்ளிக்கூடத்தில், ரெபெக்காள் பட்டம் வாங்குவதற்கு முன் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்று அவளுக்கு பாடமாக இருந்தது. அந்த நாடகத்தில் ஒரு வாலிபன் தன் ஆடைகளை அநேக முறை மாற்றவேண்டியதாக இருந்தது. ஏனென்றால் அந்த ஒரே ஆள் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறான பாத்திரங்களாக நடிக்க வேண்டியிருந்தது. அவன் வரும்போது ஒருமுறை வில்லனாக இருந்தான், மறுமுறை வரும்போது அவன் வேறே பாத்திரமாக தோன்றினான். “Enmorphe” என்னும் கிரேக்க வார்த்தைக்கு முகமூடியை மாற்றுதல் என்று அர்த்தம்;
21அதைத்தான் தேவன் செய்தார். எல்லா காலத்திலும் அதே தேவன் தான் இருக்கிறார். தேவன், பிதா என்னும் உருவத்திலும், ஆவியானவர், அக்கினிஸ்தம்பம், அதே தேவன் மாம்சமாகி நம் மத்தியில் வாசம்செய்தார். தான் காணப்பட வேண்டும் என்பதற்காக தன் முகமூடியை மாற்றிக் கொண்டு வந்தார். இப்பொழுது, அதே தேவன் பரிசுத்த ஆவியாக இருக்கிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூன்று தேவர்கள் அல்ல, மூன்று தொழில்கள், ஒரே தேவனின் மூன்று நடபடிகள்.
மூன்றல்ல, ஒரே தேவன் உண்டென்று வேதம் கூறுகிறது. இதை நீங்கள் திருத்தி மூன்று தேவர்களை வைத்துக்கொள்ள முடியாது. அதை நீர் ஒரு யூதனுக்கு அவ்விதம் அளிக்க முடியாது என்று நான் கூறுகிறேன். ஒரே ஒரு தேவன்தான் உண்டு என்பதை அவன் நன்கு அறிந்திருக்கிறான்.
22ஒரு சிற்பி தான் செதுக்கும் சிலையை ஒரு சீலையினால் மூடுவது போல், தேவன் இந்த யுகத்திற்கு செய்திருக்கிறார். அது மறைந்திருக்கிறது. இவைகளெல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இக்காலத்தில்தான் வெளிப்படுத்தப்பட வேண்டிய தாயிருக்கிறது. பின்மாரி காலத்தில் இவைகள் வெளிப்படும் என்று வேதம் உரைக்கிறது. ஒரு சிற்பி தன் சிலையை திரையினால் மூடிவைத்திருந்து காலம் வந்ததும் அதைத் திறந்துக்காட்டுவதுப் போல் இருக்கிறது.
இவ்விதமாகத்தான் வேதாகமம் அமைக்கப்பட்டிருக்கிறது. அது மறைக்கப் பட்டிருக்கும் தேவனுடைய ஒரு கிரியையாக இருக்கிறது. உலகம் அஸ்திபாரம் போடப்பட்டதிலிருந்து மறைக்கப்பட்டிருந்த ஏழு விதமான இரகசியங்களை இந்த லவோதிக்கேயா சபையின் காலத்தில் நாம் முழு காரியத்தையும் காணும்படியாக திரையை நீக்கிக் காட்டுவதாக தேவன் இக்காலத்திற்கு வாக்குரைத்திருக்கிறார். என்ன ஒரு மகிமையானக் காரியம்!
தேவன் என் மார்பி ஒரு அக்கினி ஸ்தம்பத்தில் மறைத்துக் கொண்டிருந்தார்; தேவன், இயேசு என்னும் ஒரு மனிதனுக்குள் மறைந்திருந்தார், தேவன் என் மார்பி தம்முடைய சபையில் மறைந்திருக்கிறார். நம் மேலிருக்கும் தேவன் நம்முடன் இருக்கும் தேவன், நமக்குள்ளிருக்கும் தேவன். தேவன், கீழே நோக்கி இறங்குதல்.
அவர் மலையின் மேல் இறங்கி அமர்ந்தபோது யாரும் அவரை நெருங்கக் கூடாதிருந்தது. மலையை எந்த மிருகமாவது தொட்டால் அது கொல்லப்பட வேண்டியதாய் இருந்தது;
பிறகு, தேவன் இறங்கி வந்து, தம்முடைய கூடாரத்தை மாற்றிக்கொண்டு நம்முடன் வாசம்செய்தார். நம்மில் ஒருவரைப் போலிருந்தார். அவரை நாம் கண்டோம். ''அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிற படியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்'' என்று வேதாகமத்தில் 1 தீமோத்தேயு 3:16 கூறுகிறது. கைகளால் அவரை தொட்டோம்! தேவன் ஆகாரத்தை புசித்தார், தேவன் தண்ணீரைக் குடித்தார், தேவன் நித்திரை செய்தார். தேவன் அழுதார். அவர் நம்மில் ஒருவராக இருந்தார். வேதத்தில் இவைகள் 'சாயலாகவும்', 'நிழலாகவும் பொருத்தப்பட்டிருப்பது அழகாயிருக்கிறது.
தேவன் நமக்கு மேலே இருந்தார். தேவன் நம்முடன் இருக்கிறார், இப்பொழுதோ தேவன் நமக்குள் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மூன்றாவது நபரல்ல, அதே நபர் தான்!
23தேவன் இறங்கி வந்து , மாம்சமாகி கிறிஸ்துவுக்குள் மரித்ததினால் சபையை சுத்திகரித்து அதற்குள் வாசம் செய்து ஐக்கியம் கொள்ள முடிந்தது. தேவன் ஐக்கியத்தை நேசிக்கிறார். ஆதியிலே தேவன் மனிதனை உண்டாக்கினதே ஐக்கியத்திற்காக தான். தேவன், சேராபீன்கள் மத்தியில் தனித்து வாசம் செய்கிறார்.
இப்பொழுது கவனியுங்கள், அவர் மனிதனை உண்டாக்கினார், மனிதன் விழுந்துப் போனான். ஆகவே, அவர் இறங்கி வந்து மனிதனை மீட்டுக் கொண்டார். ஏனென்றால் தேவன் ஆராதிக்கப்படுவதை நேசிக்கிறார், தேவன் என்னும் வார்த்தைக்கு ''ஆராதிக்கப்படும் பொருள்'' என்றுதான் அர்த்தம்,
வெளிச்சம் உண்டாக்கக்கடவது என்று தேவன் கூறினபோது வெளிச்சம் உண்டாயிற்று. அதே தேவன் தான் நம் மத்தியில் ஒரு அக்கினி ஸ்தம்பமாக வந்து நம்முடைய இருதயங்களை மாற்றுகிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
24இக்காலையிலே நான் கூறினதுப் போல ஆதியிலே தேவன் தம்முடைய பண்புகளை (attributes) தம்மிலே உள்ளவராக இருந்தார். தேவன் மாத்திரமே இருந்தார் வேறொன்றும் இருக்கவில்லை. ஆனால், அவருக்குள் எண்ணங்கள் இருந்தன.
ஒரு சிறந்த சிற்பி முதலில் உட்கார்ந்துதான் செய்யப்போவதை தன் சிந்தையிலே உருவாக்குவதுபோல - அவன் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கெனவே சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை எடுத்து அதை வேறொரு உருவமாக்கு கிறான். ஏனென்றால் தேவன் ஒருவரே சிருஷ்டிக்கக் கூடியவராக இருக்கிறார். அவர் எதை செய்யப்போகிறாரோ அதை தன் சிந்தையில் எண்ணுகிறார். அதுதான் அவரது எண்ணங்கள். அது தான் அவரது விருப்பங்கள். முதலில் அது ஒரு எண்ணமாக இருக்கிறது. பிறகு அவர் அதை பேசுகிறார். அப்பொழுது அது ஒரு வார்த்தையாகிறது.
வெளிப்படுத்தப்பட்ட ஒரு எண்ணமே ஒரு வார்த்தையாயிருக்கிறது. ஆனால், முதலில் அது ஒரு எண்ணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இவைகள் தேவனுடைய பண்புகளாக இருக்கின்றன. பிறகு அது ஒரு எண்ணமாக மாறி அதன் பிறகு அது ஒரு வார்த்தையாகிறது.
25கவனியுங்கள். இந்த இரவு யார் யார் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறார்களோ, அவர்கள், ஒரு தேவதூதனோ, நட்சத்திரமோ, கேருபீனோ, அல்லது யாதொன்றும் உண்டாவதற்கு முன்பே அவரோடும், அவருக்குள்ளும், அவருடைய சிந்தையிலும் இருந்திருக்கிறார்கள். அதுதான் நித்தியம். உனக்குள் நித்திய ஜீவன் இருக்குமென்றால் நீ எப்பொழுதும் இருந்திருக்கிறாய். ஒரு உருவத்திலே இங்கிருப்பதல்ல; ஆனால் உருவமும், சாயலும் எல்லையற்ற தேவனுக்குள் இருந்திருக்கின்றன.
அவர் எல்லையற்றவராய் இருக்கவில் லையென்றால் அவர் தேவனாய் இருக்க முடியாது. தேவன் எல்லையற்றவராய் இருக்க வேண்டும். நாம் எல்லைக்குட் பட்டவர்களாய் இருக்கிறோம். அவர் எல்லை யற்றவராய் இருக்கிறார். அவர் சர்வ வியாபியாயும், சர்வ ஞான முள்ளவரும், சர்வ வல்லமை உள்ளவருமாய் இருந்தார். அவர் அவ்வண்ணமிருக்கவில்லையென் றால் அவர் தேவனாய் இருக்க முடியாது. அவர் சர்வ வியாபியாக இருப்பதால் எல்லாக் காரியங்களையும், எல்லா இடங்களையும் அறிந்திருக்கிறார். சர்வ ஞானியாயிருப்பது அவரை சர்வவல்லமை உள்ளவராக்குகிறது. அவர் காற்றை போலில்லாமல் ஒருஆளாக இருக்கிறார். ஒரு ஆளாக இருப்பதால் ஒரு வீட்டில் வாசம் செய்கிறவராய் இருக்கிறார். ஆனால், சர்வ ஞானியாயிருப்பதால், எல்லாவற் றையும் அறிந்திருப்பது, இது அவரை சர்வவியாபியாக இருக்க செய்கிறது. ஏனென்றால் அவர் நடந்துகொண்டிருக்கின்ற ஒவ்வொரு காரியத்தையும் அறிந்திருக் கிறார்.
அவர் அறியாமல் ஒரு சிறு பூச்சிக்கூட கண் சிமிட்டுவதில்லை. உலகம் உண்டாவதற்கு முன்னும், ஒவ்வொரு சிறிய பூச்சியும் எத்தனை முறை தன்னுடைய கண்ணை சிமிட்டும் என்பதையும், எவ்வளவு கொழுப்பு அதனுள் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதுதான் எல்லையற்ற தன்மையாகும். இதை நம்முடைய சிந்தையில் கூட நினைக்க முடியாது. ஆனால் அதுதான் எல்லையற்ற தேவனாய் இருப்பதாகும்.
26உன்னுடைய கண்கள், உன்னுடைய உருவம், நீ எப்படி இருக்கிறாயோ, அந்த விதமாகவே ஆதியிலே நீ அவருடைய சிந்தையில் இருந்தாய் என்பதை நினைத்துக் கொள். நீ இப்பொழுது வார்த்தையின் வெளிப்படுத்தலாய் இருக்கிறாய். அவர் தன் சிந்தையில் எண்ணின பிறகு அவர் பேசினார், நீ இப்பொழுது இங்கு இருக்கிறாய். நீ அவருடைய சிந்தையில் இல்லாதிருந் தால் நித்திய ஜீவனைப் பெற உனக்கு வேறே வழியே இல்லை; ஏனென்றால் அவர் ஒருவரே நித்திய ஜீவனைக் கொடுக்கிறவர்.
“விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்' என்னும் தேவவாக்கி யத்தை நாம் வாசித்ததை நினைவு கூருங்கள். அவருடைய முன் குறித்தல் நிலை நிற்கத்தக்கதாக எல்லா காலத்திற்கு முன் அவர் தெரிந்தெடுத்திருக்கிறார். தெரிந்தெடுப்பதில், தேவன் பூரண சுயாதீனம் உள்ளவராயிருக்கிறார் என்பதை நீ அறிவாயோ? தேவன் பூரண சுயாதீன முள்ளவர்.உலகத்தை உண்டாக்க ஒரு சிறந்த வழியை அவருக்கு சொல்லத்தக் கதாக அப்பொழுது இருந்தவன் யார்? அவர், தன் வழிகளில் தவறு செய்திருக்கிறார் என்றுசொல்லத்தக்க துணிவு உள்ளவன் யார்? வார்த்தையே பூரண சுயாதீனமுள்ளது. வெளிப்படுத்தல் கூட பூரண சுயாதீனம் உள்ளதாயிருக்கிறது. யாருக்கு வெளிப் படுத்த விரும்புகிறாரோ அவர்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார். தேவனுக்குள் வெளிப் படுத்தலே ஒரு பூரண சுயாதீனமுள்ளதாய் இருக்கிறது. ஆகவே தான், மக்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர் களாய் சிலக்காரியங்களைக் குறித்து குதித்துக்கொண்டும், முட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் இருக்கிறார்கள். தேவன் தன் கிரியைகளில் பூரண சுயாதீனமுள்ள வராய் இருக்கிறார்.
27அவர் ஆதியிலே தம்முடைய பண்புகளை தன்னில் தானே உடையவராய் இருந்தார் என்பதை காண்கிறோம். அப்பொழுது நீ அவருக்குள் இருந்தாய். அப்படியெனில், ஜீவபுஸ்தகம் எப்பொழுது காட்சிக்குக் கொண்டு வரப்பட்டது.
உலகதோற்றதிற்கு முன் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் எல்லாரையும் இந்தக் கடைசிக் காலத்தில் பூமியின் மீது வரும் மிருகம் வஞ்சிக்கும் என்று வெளிப்படுத்தல் 13:8-ல் வாசிக்கிறோம்.
இயேசு பூமியில் பிறப்பதற்கு நாலாயிரம் வருடங்களுக்கு முன்னும், நீ இந்த பூமியின் மீது வருவதற்கு முன்னும் தேவனுடைய சிந்தையிலே இயேசு உலகத்தின் பாவத்திற்காக மரித்தார், அப்பொழுது ஜீவ புஸ்தகம் உண்டாக்கப்பட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். உலகம் அஸ்திபாரம் போடுவதற்கு முன்பே உன் பெயர் தேவனால் முன்குறிக்கப்பட்டு ஜீவபுஸ்த கத்தில் எழுதப்பட்டது.
நீ அவருடைய தன்மைகளில் இருந்தாய். நீ அதை நினைவில் கொண்டிருப் பதில்லை. ஏனெனில் நீ அவருடைய ஜீவனில் ஒருபாகமாக இருந்தாய்.
நீ உன்னுடைய உலகப்பிரகாரமான தந்தையின் ஒரு பாகமாக இருப்பதுப்போல நீ தேவனுடைய ஒரு குமாரனாகவோ அல்லது குமாரத்தியாகவோ ஆகும் பொழுது தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறாய். அது சரிதான். ஆண் இனத்தில்தான் வித்து இருக்கிறது. அது முட்டைக்குள் செல்லும் போது நீ உன்னுடைய தகப்பனுடைய ஒரு பாகமாக்கப்படுகிறாய். உன்னுடைய தாயும் உன்னுடைய தகப்பனுடைய ஒரு அங்கமாக இருக்கிறாள். ஆகவே, நீங்கள் எல்லோரும் உங்களுடைய தகப்பனின் ஒருபாகமாக இருக்கிறீர்கள்.
மகிமை! இந்த வெளிப்படுத்தல் ஸ்தாபன சபையை முற்றிலுமாக புறம்பாக்கிப் போடுகிறது. உண்மையிலேயே அப்படி செய்கிறது. தேவனே எல்லாவற் றிலும் எல்லாமாயிருக்கிறார்.
28இப்பொழுது, அவருடைய தன்மையை கவனியுங்கள். அப்பொழுது அந்த தன்மை முதலாவதாக தேவன்; அந்த சிந்தை, அந்த தன்மை தாமே, எல்லாம் ஒன்றிற்குள் இருந்தன. இன்னும் வெளிப்படாமல் இருந்தன. அவர் அடுத்ததாக வெளிப்படுத்தினார் அப்பொழுது அவர் அந்த வார்த்தையானார். பிறகு வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தார்.
பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் முதலாம் அதிகாரம் முதலாம் வசனம் இதை கவனியுங்கள், இது ''ஆதியிலே“ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு அது நித்தியமாய் இருந்தது. கவனியுங்கள் '' ஆதியிலே வார்த்தையிருந்தது'' எப்பொழுது நேரமானது துவங்கினதோ, அப்பொழுது அது வார்த்தையானது. ஆனால் அது வார்த்தையாவதற்கு முன்பு, ஒரு தன்மையாக, ஒரு எண்ணமாக இருந்தது. அதன் பிறகு தான் அது ''ஆதியிலே வார்த்தையாக இருந்தது'' என்று வெளிப் படுத்தப்பட்டது.
மெல்கிசேதேக்கு எங்கிருந்தார் என்பதற்கு இப்பொழுது வருகிறோம். அவர் தான் இந்த இரகசியமான ஆள், ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. பிறகு, வார்த்தை மாம்சமாகி நம் மத்தியில் வாசம் செய்தார். இதை அப்படியே பற்றிக் கொண்டிருங்கள்.
இப்பொழுது கவனியுங்கள். நித்திய மகத்துவமானவரும், இயற்கைக்கு அப்பாற் பட்ட தேவனுமானவர் முதலில் ஆவியாய் இருந்தார். மாம்சத்தில் வெளிப்படுவதற்காக, இரண்டாவதாக வார்த்தையென்னும் சரீரமாகிய ஆவிக்குரிய சரீரத்தில் தியோபனி (theophany) தோன்றினார். மெல்கிசேதேக்காக ஆபிரகாமை சந்தித்தபோது இவ்விதமான சரீரத்தில்தான் இருந்தார். அவர் தியாபனி உருவில் இருந்தார். கர்த்தருக்கு சித்தமானால் இன்னும் சில நிமிடங்களுக்குள் இதை நிரூபிப்போம். அவர் வார்த்தையாக இருந்தார்.
29'தியாபனி' (theophany) யென்னும் தியாபனி உருவில் சரீரத்தை நீங்கள் பார்க்க முடியாது. அது இப்பொழுது இங்கே இருக்கக்கூடும். ஆயினும் அதை நீங்கள் காணமுடியாது. அது டெலிவிஷனைப் போல இன்னொரு பரிமாணத்தில் (dimension) உள்ளது. டெலிவிஷன்... இப்பொழுது, மக்கள் இந்த அறையில் பாடிக்கொண்டும், அசைந்துக் கொண்டும் இருக்கிறார்கள்; பலவிதமான நிறங்களிலும் இருக்கின்றனர். ஆனால் கண்ணானது ஐந்து அறிவுகளின் தன்மைக்கு கட்டுப்பட்டிருக்கிறது. உங்களது முழு சரீரமே ஐந்து அறிவுக்குள்தான் கட்டுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதனுடைய பார்வையின் எல்லைக்குள் இருப்பதை மாத்திரம் தான் கண் பார்க்க முடிகிறது. ஆனால் இன்னொரு பரிமாணத்தில் உள்ளதை “டெலிவிஷன்'ஐ இயக்கும் கருவியின் மூலமாக மாத்திரமே பார்க்கமுடியும்.
டெலிவிஷன் ஒரு உருவத்தை உருவாக்குவதில்லை. டெலிவிஷன் ஒளி அலைகளை இழுத்து கருவியின் அமைப்புக்குள் அனுப்பும்போது அங்கிருக்கும் ஒரு சிறு திரை அவைகளை உருவங்களாக காண்பிக்கிறது. ஆரம்பத்திலேயே உருவங்கள் அங்கிருந்தன. ஆதாம் இங்கிருந்தபோது டெலிவிஷனும் அங்கே இருந்தது. எலியா கர்மேல் பர்வதத்தின் மீது இருந்த போது டெலிவிஷன் அங்கிருந்தது. நசரேயனாகிய இயேசு கலிலேயாக் கடற்கரையில் நடந்த போது டெலிவிஷன் அங்கிருந்தது. ஆனால், நீ அதை இப்பொழுதுதான் கண்டுபிடித்திருக் கிறாய். அவர்கள் அப்பொழுது அதை நம்பி இருக்க மாட்டார்கள். அதை நீ அப்பொழுது கூறியிருப்பாயானால் உன்னை பைத்தியக் காரன் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அது இப்பொழுது ஒரு உண்மையாகி விட்டது!
அதேப்போல், கிறிஸ்துவும் இங்கிருக் கிறார்! தேவ தூதர்கள் இங்கிருக்கிறார்கள் அந்த மகத்தான ஆயிர வருஷ அரசாட்சி வரும்போது, இப்போது இங்கிருக்கும் டெலிவிஷன் அல்லது மற்ற பொருட்களைக் காட்டிலும் அதிக நிஜமானதாகக் காணப்படும்.
தம்முடைய ஊழியக்காரர்களுக்குள் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர் உரிமையோடே கூறுவது போல் தம்முடைய மகத்தான உருவத்தில் வெளிப்படுத்தி, தம்முடைய பிரசன்னத்தை நிரூபிக்கிறார்.
இப்பொழுது அவர் ஆவியின் ரூபத்தில் இருக்கிறார். பிறகு அவர் என் மார்பி (Enmorphe) உருவத்தில் வருகிறார். இந்த என் மார்பில் உருவத்தில்தான் ஆபிரகாமுக்கு தோன்றினார். ஆபிரகாம் ராஜாக்களை முறியடித்த பிறகு திரும்பி வரும்போது மெல்கிசேதேக்கு அங்கே வருகிறார், அவரிடம் அவன் பேசினான்.
30அன்றொரு நாள் டூசான் செய்தித்தாளில் ஒரு சம்பவத்தை படித்துக்கொண்டிருந்தேன் ஒரு பெண் சாலையில் தன்னுடைய 'காரை' நாற்பது அல்லது ஐம்பது மைல் வேகத்தில் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, மேல் அங்கியை அணிந்திருந்த ஒரு வயதான மனிதனை இடித்துவிட்டாள். அவள் அலறிக் கொண்டே காரை நிறுத்தினாள். அது அவனை ஆகாயத்தில் தூக்கி எறிந்திருக் கிறது. இச்சம்பவம் ஒரு வனாந்திரமான இடத்தில் நடந்திருக்கிறது. அடிப்பட்டவனை பார்ப்பதற்காக அவள் கீழே இறங்கி ஓடியிருக்கிறாள்; ஆனால் அந்த ஆளோ அங்கிருக்கவில்லை. அவளுக்கு பின்னால் வந்தவர்களும் அதே போன்று நிகழக் கண்டனர் அந்த வயதான மனிதன் தூக்கி எறியப்பட்டான் அவனுடைய அங்கி பறந்தது. ஆகவே, நடந்ததை அறிந்துக்கொள்ள அவர்களும் ஓடியிருக்கிறார்கள். அவர்கள் அந்த மனிதனை எங்கு தேடியும் காணவில்லை. அவர்கள் போலீஸ்காரர் களை அழைத்தனர். போலீஸ்காரரும் அந்த இடத்தை சோதித்து பார்க்க வந்தனர். ஆனால் அந்த அடிபட்ட மனிதன் காணப்படவில்லை.
'கார் அந்த மனிதனை இடித்ததைக் குறித்து ஒவ்வொருவரும் சாட்சி கூறினர். அவன் ஆகாயத்தில் தூக்கி எறியப்பட்டதை ஒவ்வொருவரும் பார்த்தார்கள். இரண்டு அல்லது மூன்று கார்களில் வந்தவர்கள் அதை பார்த்ததாக சாட்சிக் கூறினார்கள். காரியங்களை ஆராய்ந்து பார்த்தபோது, ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வயதான மனிதன் மேல் அங்கியுடன் அந்த பக்கம் செல்லும்போது ஒரு கார் அவன் மீது மோதியதால் அந்த இடத்திலேயே அவன் மரித்துபோனான் என்பது தெரிய வந்திருக்கிறது.
நீ இந்த இடத்தை விட்டு பிரியும்போது மரித்து விடுவதில்லை. நீ ஒரு பாவியாக இருந்தாலும் நீ திரும்பவும் வந்து உன்னுடைய சரீரத்தில் செய்த கிரியைகளுக்காக நியாயந்தீர்க்கப்பட வேண்டியதாயிருக்கிறது. ''பூமிக்குரிய இக்கூடாரம் அழிந்து போனாலும் நமக்கு ஒரு கூடாரம் காத்துக்கொண்டிருக்கிறது“ அதுதான் என் மார்பி (Enmorphe), அந்த வார்த்தை .
31தேவன் பிறகு மாம்சத்தில் இயேசுவாக தோன்றினார். எதிலிருந்து அவ்விதம் வந்தார்? மகத்தான ஆரம்பமாகிய ஆவியாக, பிறகு வார்த்தையாக மாறுவதற்காக கீழே வந்தார். தாமே வெளிகொணர்ந்தது. அந்த வார்த்தை இன்னுமாக தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை, அது உரைத்தது என் மார்பி ஆக ஆனது. பின்னர், அவர் பாவிகளாகிய நம்மெல்லோருக் காகவும் மரிக்கத்தக்கதாக, அவர் பேசின போது வார்த்தையாகி பிறகு மாம்சத்தில் இயேசுவாக வந்தார்.
ஆபிரகாம் அவரை சந்தித்தபோது அவர் மெல்கிசேதேக்காக இருந்தார். கடைசியாக ஒவ்வொரு ஆபிரகாமுடைய குமாரனுக் குள்ளும் அவருடைய பண்புகளாகிய எண்ணங்கள் எப்படி நிறைவேறப் போகிறதென்பதை இங்கே வெளிப்படுத்து கிறார். ஒவ்வொரு விசுவாசத்தின் குமாரனும் முற்றிலுமாக இவ்வண்ண மாகவே செய்வான். ஆனால், நாம் எப்படி வந்திருக்கிறோம் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
ரூத் - போவாஸ் சரித்திரத்தில், அவர் எப்படி ஒரு மீட்கும் இனத்தானாக மாம்சத்தில் வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தி இருப்பதை காண்கிறோம்.
32அவருடைய ஆவியின் குமாரர்கள் வார்த்தை ரூபத்தில் இருக்கும் சரீரத்திற்குள் இன்னும் பிரவேசிக்கவில்லை. ஆனால் ஒரு தியாபனி, இந்த சரீரம் வார்த்தைக்கு உட்பட்டிருந்து சரீரம் மறுரூபமாவதற்காக வாஞ்சையுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
இப்பொழுது, அவருக்கும் ஒரு குமாரனாக இருக்கும் உனக்கும் உள்ள வித்தியாசத்தை கவனி. அவர் ஆதியிலே என் மார்பி சரீரமாக வார்த்தையாக இருந்தார். அவர் மெல்கி சேதேக்கு என்னும் சரீரத்திற்குள் வந்து வாசம் செய்தார். அதற்கு பிறகு மெல்கிசேதேக்கை குறித்து நாம் ஒன்றும் கேள்விப்படவில்லை. ஏனென்றால் அவர் இயேசு கிறிஸ்துவானார், மெல்கிசேதேக்கு ஆசாரியனாக இருந்தார். ஆனால் அவர் இயேசு கிறிஸ்துவாக வந்தார். நீ அந்த சரீர வழியாக வராமல் வேறு வழியாக வந்திருக்கிறாய்; ஏனென்றால் அந்த சரீரத்தில் அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவைகளை நீ இன்னும் அறிந்துக்கொள்ள முடியாமல் இருக்கிறாய்.
நீ ஆதாமைப் போலவும், என்னைப் போலவும் வந்திருக்கிறாய். நீ சோதிக்கப் படுவதற்காக அவருடைய சிந்தையிலிருந்து நேரடியாக மாம்சமாக வந்திருக்கிறாய். இங்கே இந்த வாழ்க்கை முடிந்தவுடன்... ''இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும் நமக்கு ஒரு கூடாரம் காத்துக் கொண்டிருக்கிறது. அங்கே தான் நாம் போகிறோம். அது தான் வார்த்தை. அப்பொழுது நாம் திரும்பிப்பார்த்து நாம் செய்ததை புரிந்துக்கொள்ளுவோம். நாம் இப்பொழுது அவைகளை புரிந்துக்கொள்வ தில்லை. நாம் இன்னும் வார்த்தையாக மாறவில்லை; மாம்ச மனிதனாக இருக்கிறோம், வார்த்தையாக அல்ல.
ஆதியிலே நீ தேவனுடைய சிந்தையில் எண்ணமாக இருந்திருந்தால் ஒழிய வார்த்தையாக முடியாது என்பதை தெளிவாக அறிந்துக்கொள். இதுதான் தேவனுடைய முன்குறித்தலை நிரூபிக் கிறது. நீ ஒரு எண்ணமாக இல்லாதிருந்தால் வார்த்தையாக இருந்திருக்க முடியாது. முதலிலே நீ சிந்தையில் இருந்திருக்க வேண்டும். நீ சோதனையை எதிர்த்து நிற்க ஆவிக்குரிய சரீரத்தின் வழியாக வராமல் வேறு வழியாக மாம்சத்தில் வர வேண்டியதாய் இருந்தது... ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்“ ஆதியிலே நீ அவருக்குள் இருந்திருக்க வேண்டும்.
33உலகம் அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்பே அவருடைய பெயர் ஆட்டுக்குட்டி யானவரின் ஜீவபுஸ்தகத்தில் இருந்தது. பிறகு அதிலிருந்து அவர் வார்த்தையானார். இந்த தியாபனி ஆவிக்குரிய சரீரத்தில் அவர் தோன்றவும், மறையவும் முடிந்தது. அதன் பிறகு அவர் மாம்சத்தில் வந்து உயிர்த்தெழுந்து மகிமையின் சரீரத்தில் திரும்ப சென்றுவிட்டார்.
ஆனால் நீயோ, பாவத்தினால் சோதிக்கப்படுவதற்காக ஆவிக்குரிய சரீரத்தில் பிவேசிக்காமல் வேறு வழியாக மாம்சத்தில் வந்திருக்கிறாய். அதற்கு பிறகு இப்பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும் நமக்கு வேறொரு கூடாரம் காத்துக்கொண் டிருக்கிறது'' அந்த சரீரத்தை நாம் இன்னும் பெறவில்லை.
அழியாத ஜீவனாகிய தேவனுடைய ஆவியை இந்த சரீரம் பெற்றுக்கொள்ளும் போது அது இந்த சரீரத்தை தேவனுக்கு கீழ்படியப்பண்ணுகிறது. அல்லேலூயா! “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்; அவன் பாவம் செய்யமாட்டான்,'' ''ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்ட வர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை'' (ரோமர் 8:1). இங்கேதான் நீங்கள் இருக்கிறீர்கள். அது உங்கள் சரீரங்களை தேவனுக்கு கீழ்ப்படியச் செய்கிறது.
ஓ, நான் குடிப்பழக்கத்தை விட்டு விட்டால்போதும் என்று நீ சொல்ல வேண்டியதில்லை. நீ கிறிஸ்துவுக்குள் வந்தால் போதும்; எல்லா தீய பழக்கங்களும் உன்னை விட்டு போய்விடும். ஏனென்றால் உன்னுடைய சரீரம் ஆவிக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. இனி உலகக் காரியங் களுக்கு கீழ்ப்பட்டிராமல் அவைகளுக்கு மரித்ததாக இருக்கிறது. உன்னுடைய பாவங்கள் ஞானஸ்நானத்தினால் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன; நீயோ கிறிஸ்து வுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறாய். உன்னுடைய சரீரம் ஆவிக்கு கீழ்ப்படிந்து சரியான ஜீவியம் செய்ய முயற்சிக்கும்.
34ஸ்திரீகளாகிய நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதாகக் கூறிக்கொண்டே சிறிய அரை காற்சட்டையை அணிந்துக் கொண்டு செல்லுகிறீர்கள். நீங்கள் எப்படி இதை செய்ய முடியும்? உங்களில் இருக்கும் தேவ ஆவியானவர், நீங்கள் இவ்விதமானக் காரியங்களை செய்ய எப்படி அனுமதிக் கிறார்? அது அப்படி இருக்கவே முடியாது. நிச்சயமாக அவ்விதம் இருக்கமுடியாது. அவர் ஒரு அசுத்த ஆவியல்ல; அவர்தான் பரிசுத்த ஆவியாக இருக்கிறார்.
நீங்கள் உங்களை ஆவியானவருக்கு தாழ்த்தி ஒப்புக்கொடுக்கும்போது நீங்கள் முழுமையாக ஆவியானவருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிறீர்கள். தேவனுடைய ஆவியானவர் வார்த்தையாகிய வித்தை உயிர்ப்பித்து ஜீவிக்கும்படி செய்கிறார். வேதாகமம் ''இதை செய்யாதே“ என்று சொல்லும்போது சரீரமானது எந்தவிதமான கேள்வியும் எழுப்பாமல் உடனடியாக கீழ்ப்படிகிறது.
அது என்ன? அதுதான் உயிர்த் தெழுதலின் அச்சாரமாய் இருக்கிறது. இந்த சரீரம் மீண்டும் எழுப்பப்படும். ஏனென்றால் அது ஏற்கெனவே உயிர்ப்பிக்கப்பட்டிருக் கிறது. ஒருகாலத்தில் இந்த சரீரம் பாவத்திலும், சக்தியிலும், சீர் கேட்டிலும் இருந்தது. ஆனால் இப்பொழுதோ ஆவியின் அச்சாரத்தைப்பெற்று பரலோகத்துக்குரிய தாக மாறியிருக்கிறது. இப்பொழுது நீ எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வதற்கு இதுவே அச்சாரமாயிருக்கிறது. அதுதான் அச்சாரம்.
வியாதியாயிருக்கிற ஒருவன் மரித்துக் கொண்டிருக்கிறான். மரணம் மாத்திரம் அவனுக்கு விடப்பட்டிருக்கிறது; இவ்வித மான காரியங்கள்தான் நடக்கிறது. புற்று நோயினாலும், க்ஷய காச நோயினாலும் சரீரம் அழிந்துப்போய் வெறும் மக்களுடைய உருவத்தின்நிழலை மாத்திரம் பார்த்திருக்கி றேன். சிறிது காலத்திற்கு பிறகு பூரண சுகமடைந்து நல்ல பலமுடன் இருப் பதையும் பார்த்திருக்கிறேன். தெய்வீக சுகமில்லையென்றால் உயிர்த்தெழுதலே இல்லை. ஏனென்றால் தெய்வீக சுகமே உயிர்த்தெழுதலின் அச்சாரமாக இருக்கிறது. ஆமென்.
அச்சாரமாகக் கொடுக்கப்படும் கிரயம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அதுதான் முன் பணம், ''நம்முடைய அக்கிரமங்களுக்காக அவர் நொறுக்கப் பட்டார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்'' நாம் அவரை நேசிப்பது எவ்வளவு அருமையானது என்பதை கவனியுங்கள்.
35இப்பொழுது இந்த சரீரம் ஆவியானவருக்கு கீழ்ப்பட்டிருக்கிறது. நாம் இன்னும் வார்த்தையின் உருவத்திற்குள் பிரவேசிக்கவில்லை. நாம் இன்னும் மாம்ச உருவத்தில்தான் இருக்கிறோம்; ஆனால் வார்த்தைக்கு கீழ்ப்பட்டிருக்கிறோம். மாம்சத்தில் நேரிடும் மரணம் நம்மை அங்கு கொண்டு செல்லும்.
ஒரு சிறு குழந்தையை கவனித்துப் பாருங்கள். ஒரு கர்ப்பவதியான ஸ்திரீக்கு பிள்ளை பிறப்பதற்கு முன் அவளை கவனித்துப்பார்ப்பீர்களானால் அவள் எவ்வளவு கொடூரமானவளாக இருந்தாலும் அந்த சமயத்தில் உண்மையிலேயே அவள் அன்புள்ளவளாக மாறிவிடுகிறாள். தாயாகக் கூடிய நிலைமையில் இருப்பவளிடத்தில் ஒருவித தெய்வீகம் காணப்படுகிறது. அது ஏன்? அந்த சிறிய சரீரம்... அது இன்னும் உயிரடையவில்லை . அது வெறும் மாம்சமும், தசையுமாயிருக்கிறது. அங்கே குதித்துக்கொண்டிருப்பது வெறும் தசை அசைவதாகும். ஆனால், அது கர்ப்பத் திலிருந்து பிறக்கும்போது தேவன் ஜீவ சுவாசத்தை அதற்குள் ஊதுகிறார். அப்பொழுது தான் அந்தக் குழந்தை அழுகிறது. இங்கே ஒரு இயற்கையான சரீரம் உருவாக்கப்பட்டிருப்பது எவ்வளவு உண்மையோ அதேபோல நாம் அங்கு செல்லும்போது நம்மை ஏற்றுக்கொள்ளத்தக் கதாக ஆவிக்குரிய சரீரம் ஒன்று அங்குண்டு.
36ஒருவன் பரலோகத்திலிருந்து மறுபடி யும் பிறக்கும்போது அவன் கிறிஸ்துவுக்குள் ஒரு பாலனாக இருக்கிறான்.
இந்த மாம்சசரீரமாகிய அங்கி கீழே விழுந்துவிடும் போது ஸ்திரீயினால் பிறவாததும் கைவேலையில்லாததுமாகிய தியாபனி ஆவிக்குரிய சரீரம் நமக்கு ஒன்று உண்டு.
அந்த சரீரம் மறுபடியும் வந்து மகிமையின் சரீரத்தை எடுத்துக்கொள்ளு கிறது.
ஆகவே தான் இயேசு, தான் மரித்தபோது காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு பிரசங்கிக்க பாதாளத்திற்கு சென்றார். மீண்டுமாக ஆவிக்குரிய சரீரத்திற்குள் பிரவேசித்தார். ஓ, என்ன அதிசயம், தேவனுக்கு ஸ்தோத்திரம்!
2. கொரிந்தியர் 5:1. ''இப்பூமிக்குரிய கூடாரம் அழிந்துபோனாலும் நமக்கு வேறொன்று இருக்கிறது'' நாம் அக்கூடாரத்தில் பிரவேசிக்காதபடி, ஆதாமைப்போல சோதிக்கப்படுவதற்காக தேவனுடைய சிந்தையிலிருந்து நேராக மாம்சத்தில் வந்திருக்கிறோம். அவருடைய வார்த்தையானது சோதிக்கப்பட்ட பிறகு, உலகம் அஸ்திபாரம் போடப்படும் முன்பே நமக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் அந்த சரீரத்திற்குள் செல்லுவோம். நாம் சோதிக்கப்பட்டு பரீட்சிக்கப்படுவதற்காக அந்தவார்த்தையாகிய சரீரத்தை தாண்டி இங்கே வந்திருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் வழியாக வந்திருந்தால் சோதனையே இருந்திருக்காது; ஏனென்றால் நாம் எல்லாற்றையும் அறிந்தவர்களாய் இருந்திருப்போம். ஆகவே தான் இயேசு எல்லாவற்றையும் அறிந்திருந்தார். ஏனென்றால் அவர் மாம்சமாவதற்கு முன் வார்த்தையாக இருந்தார். பிறகு நாம் வார்த்தையாகிறோம்.
ஆதியிலே நாம் முன் குறிக்கப்பட்டபடியால், வார்த்தையை புசித்து வார்த்தையிலே பங்குள்ளவர்களாக இருப்ப தற்காக இங்கே வார்த்தையின் சாயலாக உருவாக்கப்பட்டிருக்கிறோம். ஆதியிலே நீங்கள் உங்களுடைய யாத்திரையை ஆரம்பித்தபோது நீங்கள் பெற்றிருந்த அந்த சிறிய ஜீவ ஒளியை நினைவுகூருங்கள்... அநேகர் அதை நினைவுகூர முடியும். நீங்கள் இந்த சபையை சேர்ந்தீர்கள், அந்த சபையை சேர்ந்தீர்கள்; இதை முயற்சித்தீர்கள், அதை முயற்சித்தீர்கள். ஒன்றும் திருப்திசெய்ய வில்லை. ஆனால், ஒரு நாளிலே நீங்கள் அதை அடையாளம் கண்டுக்கொண்டீர்கள். அது சரிதான்.
37ஒருவன் ஒரு கோழியை அடைகாக்க வைத்தபோது, ஒரு கழுகு முட்டையையும் அதன் கீழே வைத்த கதையை ஓர் இரவு கலிபோர்னியாவிலோ அல்லது அரிசோனா விலோ சொல்லிக் கொண்டிருந்தேன். அந்த கழுகு முட்டை பொரித்தபோது அந்த கழுகு குஞ்சு மற்ற கோழிக் குஞ்சுகளைக் காட்டிலும் வித்தியாசமானதாகக் காணப் பட்டது. கோழி குப்பை மேட்டிற்கு சென்று அதைக் கிளறி அதிலிருக்கும் தீனியை தின்ன தன் குஞ்சுகளுக்குக் கற்றுக் கொடுத்தபோது இந்த கழுகு குஞ்சு அதைப்புரிந்துக்கொள்ள முடியாத ஒரு வித்தியாசமுள்ளதாகக் காணப்பட்டது, ''என் பிரியமே, இங்கே வந்து சாப்பிடு'' என்று கோழிகூறினபோது இந்தக் கழுகு குஞ்சு அதை புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தது, இது ஒரு கழுகாய் இருந்ததால் அதை விரும்பவில்லை. அது இதனுடைய ஆகாரமல்ல.
ஆகவே, இது வெட்டுக்கிளி போன்ற வைகளை பிடித்து தின்றது. சிறிய கோழிக்குஞ்சுகள் குப்பை மேட்டிற்கு சென்று அதைக் கிளறி அதிலிருந்தவைகளை பொறுக்கித்தின்றன. ஆனால், இந்தச் சிறிய கழுகு அவ்வண்ணம் செய்ய முடியவில்லை. அது, இதற்கு சரியென காணப்படவில்லை.
ஒரு நாள் தாய் கழுகு தன் குஞ்சை தேடிவந்தது.
38கோழி தன் குஞ்சுகளுக்கு தீனி தின்ன கற்றுக் கொடுக்கும் போது “க்ளக், க்ளக்'' என்று சத்தமிடுவதை இந்த சிறிய கழுகும் கேட்டது. தானும் அவ்விதமாக 'க்ளக் க்ளக்' என்று சத்தமிட எவ்வளவோ முயற்சித்தது. ஆனால் அதனால் முடியவில்லை. அது ஒரு கழுகாக இருந்தது. ஆரம்பத்திலேயே அது ஒரு கழுகாக இருந்தது. அது கோழியினால் அடைகாக்கப்பட்டு பொரிக்கப்பட்டிருந்தது.
அது சில சபை அங்கத்தினர்களைப் போல் இருக்கிறது.ஒரு நாள் அதன் தாய் அப்பக்கம் பறந்து வரும்போது தன் குஞ்சைப்பார்த்து கீச்சிட்டது. கழுகு குஞ்சு அதை புரிந்துக் கொண்டது? அந்த சத்தம் சரியாக இருந்தது! ஏன்? ஆரம்பத்திலேயே அது ஒரு கழுகாக இருந்தது.
சுவிசேஷம், வார்த்தை, இயேசு கிறிஸ்துவின் வல்லமை இவைகளைக் குறித்த காரியங்களும் இவ்வண்ணமாகவே இருக்கிறது. ஒருவன் நித்திய ஜீவனுக்கென முன்குறிக்கப்பட்டு அவன் தேவனுடைய உண்மையான சத்தத்தைக் கேட்கும்போது ஒன்றுமே அவனை தடுத்து நிறுத்த முடியாது.
சபையானது 'அற்புதங்களின் காலம் முடிந்து விட்டது. நீங்கள் இங்கே இருந்து புசியுங்கள், அங்கே அதை புசியுங்கள்'' என்று கூறினாலும், அது தேவனால் முன் குறிக்கப் பட்டவர்களை தடுத்து நிறுத்த முடியாது.
கோழியின் தானிய ஆகாரம் இந்த கழுகுகுஞ்சிற்கு இனி ஒத்துவராது. 'விசுவாசித்தால் எல்லாம் கூடும் என்னும் விசுவாசத்தால் அது தரையை விட்டு எழும்பி பறந்து செல்லும்.
இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களின் நிலைமையும் இப்படித் தான் இருக்கிறது; தரையை விட்டு தாங்கள் எழும்பமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
அந்த தாய் கழுகு தன் குஞ்சைப்பார்த்து “மகனே, குதித்தெழும்பு; நீ ஒரு கழுகாய் இருக்கிறாய். நான் இருக்கும் இடத்திற்கு நீயும் வா”என்றது.
அதற்கு அது 'அம்மா' என் வாழ்க்கையிலே நான் குதித்ததே கிடையாது'' என்றது.
அதற்கு தாய் கழுகு ''நீ குதி, நீ ஆரம்பத்திலி ருந்தே ஒரு கழுகாய் இருக்கிறாய்; நீ ஒரு கோழிக் குஞ்சல்ல'' என்றது. ஆகவே, அது முதல் தடவையாக குதித்து தன் செட்டை களை அடித்தது. சிறந்த முறையில் செட்டைகளை அடிக்காவிட்டாலும் தரையை விட்டுமேலே எழும்பினது.
இவ்விதமாகத்தான் நாமும் செய் கிறோம். எழுதப்பட்டிருக்கும் வார்த்தை யின்மேல் உள்ள விசுவாசத்தினால் நாம் தேவனை ஏற்றுக்கொள்ளுகிறோம். இங்கே ஏதோ ஒன்று மறைந்திருப்பதாக காணப் படுகிறது. நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள நீ முன் குறிக்கப்பட்டிருக்கிறாய்.
அதனுடைய தாத்தாவும், பாட்டியும் கழுகுகளாகவே இருந்தன. இதுவும் முதலிலிருந்தே கழுகாகவே இருந்தது. கழுகு மற்றவைகளோடு சேர்வதில்லை. கழுகு ஒரு போதும் கலப்பு இனத்தை சேர்ந்ததல்ல. அது கழுகாகவே இருக்கிறது.
39தேவனுடைய வார்த்தையே கழுகின் ஆகாரம்என்று அறிந்துக் கொண்ட பிறகு நீ மற்றவைகளை விட்டுவிட்டாய். பிறகு நீ, ஜீவனுள்ள தேவனின் ஜீவ உருவமாக உருவாக்கப்பட்டிருக் கிறாய். இந்தபூமிக்குரிய கூடாரம் அழிந்துப்போனாலும் நமக்கு வேறொரு கூடாரம் காத்துக்கொண்டிருக்கிறது.''
''சகோதரன் பிரன்ஹாமே, இது சரியா?'' என்று நீங்கள் கேட்கலாம்.
சில கழுகுகளைதெரிந்தெடுத்து அவைகளை குறித்து சில நிமிடங்கள் பார்ப்போம். மோசே என்ற ஒரு மனிதன் இருந்தான்.வேதாகமத்தில் தீர்க்கதரிசியை கழுகு என அழைக்கப்படுவதை ஒவ்வொருவரும் அறிவீர்கள். மோசே என்று ஒருதீர்க்கதரிசி இருந்தான். தேவன் அவனை அந்த வாக்குத்தத்த நாட்டிற்குள் பிரவேசிக்கஅனுமதிக்க வில்லை. ஒரு நாள் தேவன் அவனை அழைத்துக்கொண்டார். அவன் ஒரு மலையின் மேல்மரித்துப் போனான். தேவதூதர்கள் அவனைக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள்.
கழுகாகிய இன்னொருவன் இருந்தான். அவன்மரிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் யோர்தானைக் கடந்து சென்ற போது, தேவன் ஒரு இரதத்தை கீழே அனுப்பினார். “அவன்இந்த மாம்ச அங்கியை கீழே எறிந்துவிட்டு, எழும்பி நித்தியபரிசை பிடித்துக்கொண்டான்.''
எண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மறுரூப் மலையின்மேல் இந்த இரண்டு மனிதர்களும் நின்றார்கள். மோசேயின் சரீரம் அழிந்துப் போய் எத்தனையோ நூற்றாண்டுகளான போதிலும், பேதுரு, யோவான், யாக்கோபு அவனை புரிந்துக் கொள்ளக்கூடிய உருவத்தில் அவன் அங்கு வந்திருந்தான். ஆமென்! 'இந்தபூமிக்குரிய கூடாரம் அழிந்துப் போனாலும்...'' இங்கே பூமியின்மீது நீ தேவனுடைய வெளிப்படு த்தப்பட்ட சிந்தையாக இருப்பாயானால் இந்த உலகத்தைவிட்டு செல்லும்போது உனக்காக ஒரு சரீரம் காத்துக் கொண்டிருக்கும். அந்த மறுரூப மலையின் மேல் அவர்கள் தங்கள் ஆவிக்குரிய சரீரத்தில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள், வார்த்தை தங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள்.
40சாமுவேல் என்னும் பெயர் கொண்ட இன்னொரு தீர்க்கதரிசியை நாம் கவனிப் போம். இவன் ஒரு பெரிய மனிதனாக இருந்தான். அவன் இஸ்ரவேலுக்கு போதித்து, அவர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்று கூறினான். “நான் கர்த்தருடைய நாமத்தில் உரைத்தவைகளில் நிறை வேறாமல் போன காரியங்கள் ஏதாகிலும் உண்டா?'' என்று கேட்டான்.
அதற்கு அவர்கள் ''நீர் கர்த்தருடைய நாமத்தில் உரைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறியிருக்கின்றன“ என்று கூறினார்கள்
அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் மரித்துப்போனான்.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ராஜா ஒரு தொந்தரவில் அகப்பட்டுக் கொண்டான். இது, இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தை சிந்துவதற்கு முன் நடந்த சம்பவமாகும். அவன் பரிதீசியில் இருந்தான். எந்தோரில் இருந்த ஒரு அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ, சவுலுக்கு ஆறுதல் சொல்ல ஒருவனை அழைத்தாள். அஞ்சனம் பார்க்கிற அந்த ஸ்திரீஅவனைக் கண்டபோது “இதோ தேவன் பூமியிலிருந்து எழும்பி வர காண்கிறேன்” என்றாள்.
41அவன் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, கல்லறையில் அழுகினப் பிறகு தன் தீர்க்கதரிசியினுடைய அங்கியை போட்டுக் கொண்டு குகையில் நின்றுக்கொண்டிருந் தான். அவன் இன்னும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். ஆமென்! ஏனென்றால் அவன் ''நீ, தேவனுக்கு சத்துருவாக இருக்கும்போது, நீ ஏன் என்னை என்னுடைய இளைப்பாறு தலிலிருந்து எழும்பி வர செய்தாய்?' என்று கேட்டான். அவன் தீர்க்கதரிசனம் கூறுவதை கவனியுங்கள். ''நாளை இரவு இந்நேரத்தி ற்குள் நீ என்னிடத்தில் இருப்பாய்.'' இந்த சரீரத்திலிருந்து அவன் சென்று விட்டிருந் தாலும் இன்னுமாக அவன் ஒரு தீர்க்கதரிசி யாக இருந்தான்.
அவன் இங்கே வந்து வார்த்தையின் ஒருபாகமாக இருந்தான். இந்த சரீரத்தில் இருந்து, உலகத்தோற்றத்திற்கு முன் அவனுக்கென்று ஆயத்தமாக்கப்பட்டிருந்த சரீரத்திற்குள் சென்றான், அவன், வார்த்தை யாகிய, தியாபனி, ஆவிக்குரிய சரீரத்திற்குள் பிரவேசித்தான். இதை நீங்கள் புரிந்துக் கொண்டீர்களா? இந்த இடத்திலிருந்து நாம் போகும்போது எல்லா விசுவாசிகளும் அந்த சரீரத்திற்குள் தான் செல்லுகிறோம்.
ஒரு சிறு குழந்தை எப்படிப் பிறக்கிறது என்று சற்று முன்பு நான் கூறினது போல நீங்களும் அந்த சரீரத்திற்குள் செல்லும்போது வார்த்தையாய் இருப்பதை உணருவீர்கள். அந்த உருவத்தில் இருக்கும் போது திரையானது நீக்கப்படுகிறது.
இப்பொழுது கவனியுங்கள், முத்திரை கள் திறக்கப்பட்டதற்காக தேவனை துதியுங்கள். இக்காரியங்களை அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாயிருக்கிறது.
42மெல்கிசேதேக்கைக் குறித்த உண்மை யான வெளிப்படுத்தல் இப்பொழுது வெளிச்சத்திற்கு வருகிறது. அவர் மாம்சத்தில் வருவதற்கு முன் வார்த்தை யாகிய தேவனாக இருந்தார். வார்த் தையாகிய தேவன், ஏனென்றால், அவரைப் போல் சாவாமையுள்ளவர் ஒருவருமில்லை. எனக்கு தகப்பனும்,தாயும் இருந்தார்கள்; உங்களுக்கும் அவ்வண்ணம்உண்டு. இயேசுவுக்கும் தகப்பனும், தாயும் இருந்தார்கள். ஆனால்இந்த மனிதனுக்கு தகப்பனோ தாயோ கிடையாது. இயேசுவுக்கு ஆரம்பமாக ஒரு காலம் இருந்தது;ஆனால் இந்த மனிதனுக்கு அவ்வண்ணமாக ஆரம்பமோ முடிவோ இல்லை. இயேசு தன்ஜீவனை தந்தார்; ஆனால் இந்த மனிதன் அவ்விதம் மரிக்கவில்லை.ஏனென்றால் இவரே ஜீவன். எல்லாக் காலத்திலும் அதே மனிதனாக இருந்தார். தேவன் இதைஉங்களுக்கு வெளிப்படுத்துகிறார் என்று நம்புகிறேன். எல்லா காலத்திலும் அதே நபராகஇருக்கிறார்.
அவருடைய பட்டப்பெயர்களை கவனியுங்கள். எபிரேயர் 7:2. நீதியின் ராஜா மற்றும் சமாதானத்தின் ராஜா. அவர் இரண்டு ராஜாக்களாக இருக்கிறார். இப்பொழுது எபிரேயர் 7:22 கவனியுங்கள். அவர் நீதியின் ராஜா, சமாதானத்தின் ராஜாவாகவும் இருக்கிறார். அவர் மாம்சத்தில் வந்து அவருடைய சரீரத்தை பெற்றுக்கொண்ட தால் வெளி:19:16ல் அவர் ராஜாதி ராஜா என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரே ஆள் மூன்று ராஜாக்களாக இருக்கிறார், ராஜாவாகிய தேவன், ராஜாவாகிய தியாபனி ராஜாவாகிய இயேசு, அவரே ராஜாதி ராஜா.
ஆவி ஆத்துமா, சரீரம் மூன்றும் சேர்ந்து ஒரு மனிதனாயிருக்கிறது போல; எல்லாம் சேர்ந்து ஒருவருக்கே உரியதாயிருக்கிறது.
அவர் முதலிலே பிதாவாக இருந்தார். அவரே குமாரனும் பரிசுத்த ஆவியுமாக இருக்கிறார். நீதியின் ராஜா என்பது அந்த ஆவி தன்மை; தியாபனி, சமாதானத்தின் ராஜா, தியாபனி, மாம்சத்தில் அவர் ராஜாதி ராஜாவாக தோன்றினார். ஒரே ஆள் மூன்று தன்மைகளை வெளிப்படுத்தினார்.
43யாத்திராகமம்: 33:2ல் மோசே அவரைப் பார்த்த போது அவர் தியாபனியாகிய ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். மோசே தேவனைக் காண விரும்பினான். அவரை முட்புதரில் அக்கினி ஸ்தம்பத்திலே கண்டான். அவர் அவனுடன் பேசினபோது அவருடைய சத்தத்தைக் கேட்டான். 'நீர் யார் என்பதை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்றான். ''நீர் எனக்கு அருள் புரிந்தால் நான் உமது முகத்தைக் காணவிரும்புகிறேன்'' என்று மோசே கூறினான்.
“ஒருவனும் என் முகத்தை காண முடியாது. நான் என்னுடைய கரத்தை உன்னுடைய கண்கள் மீது வைத்து மறைத்து கடந்துபோனப் பின்பு என்னுடைய பின்புறத்தை காண்பாய், என்னுடைய முகத்தையோ காணமாட்டாய் என்றார். அவர் அவ்விதம் செய்தபோது அது ஒரு மனிதனுடைய பின்புறம் போலிருந்தது. அதுதான் தியாபனி - ஆவிக்குரிய சரீரம். வார்த்தை மோசேயினிடத்தில் வந்தபோது இருக்கிறேன்'' என்பவராக வெளிப்படுத் தினார். அதுதான் வார்த்தை இருக்கிறேன்” என்னும் வார்த்தையானவர் பற்றியெரியும் முட்புதரில் மோசேக்கு அக்கினி ஸ்தம்பமாக தரிசனமானார். அந்த “இருக்கிறேன்''
வார்த்தையாகிய அவர் தியாபனியில் ஆபிரகாமை ஓக் (Oak) மரத்தடியில் சந்தித்தபோது ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். மூன்று பேர் ஆபிரகாமிடத்தில் வந்தார்கள். அவர்கள் மரத்தடியிலே உட்கார்ந்தார்கள்.
44அவர் ஏன் வந்தார்? ஆபிரகாம், வரப்போகும் குமாரனைக் குறித்த வாக்குத்தத்தம் உடையவனாயும், தேவனு டைய வாக்குத்தத்தத்திற்கு மாறாக இருக்கும் எல்லாவற்றையும் இல்லாத வைகளாகக் கருதி தேவனுடைய வார்த் தையை நம்பிய' வார்த்தை தீர்க்கதரிசியாக அவன் இருந்த படியாலும் அவர் அவனிடத்தில் வந்தார். வார்த்தை எவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது என்பதை கவனியுங்கள். வார்த்தை தீர்க்கதரிசியி னிடத்தில் வந்தது. தேவன் ஒரு தியாபனி ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது என்று வேதாகமும் கூறுகிறது. இங்கே, வார்த்தை தியாபனி ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார்.
''அவர் தேவனோ?'' என்று நீங்கள் கேட்கலாம். அவர் தேவன் என்று ஆபிரகாம் கூறினான். அவன் அவரை 'ஏலோயிம் என்று அழைத்தான். ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் 'ஆதியிலே - ஏலோயிம் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று காண்கிறீர்கள், ஆதி. 18ம் அதிகாரத்தில், ஆபிரகாமிடத்தில் வந்து உட்கார்ந்து பேசினவரும், அவனு டைய இருதயத்தின் இரகசியங்களையும், அவருக்கு முதுகுபுறத்தில் இருந்த சாராள் நகைத்ததையும் பகுத்தறிந்து கூறினவரை ஆபிரகாம் “ஏலோயிம்'' என்று அழைத்தான். அவர் தியாபனி ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். நீங்கள் அதை புரிந்துக் கொண்டீர்களா?
45அப்பொழுது அவர் ஆவிக்குரிய சரீரத்தில் இருந்தார். அவன் அவரை “ஏலோயிம், தேவனாகிய கர்த்தர் என்று அழைத்தான். ஆதியாகமம் 18ம் அதிகாரத் தில் அது சத்தியம் என காண்கி றோம்.
அங்கே ஆபிரகாமை மூன்று பேர் சந்தித்தார்கள். ஆனால், ஆபிரகாம் ''என் ஆண்டவரே“ என்று கூறினான்.
மற்ற இரண்டு தூதர்களும் சோதோமிலே லோத்தினிடத்தில் சென்றபோது ''என் ஆண்டவன்மார்களே' என்று லோத்து கூறினான். இதற்கு காரணம் என்ன? முதலாவதாக லோத்து ஒரு தீர்க்கதரிசியல்ல, அல்லது அந்த மணிநேரத்திற்குரிய செய்தியாளனுமல்ல. ஆகவே, அவரைக் குறித்த வெளிப்படுத்தல் அவனுக்கில்லை. இதுதான் சரியாக இருக்கிறது. லோத்து, அவர்களை பன்மையில் ''ஆண்டவன் மார்களே'' என்று கூறினான்.
ஆபிரகாம், எத்தனை பேரை பார்த்தப் போதிலும் ஒரே ஒரு கர்த்தர் என்பதை அறிந்திருந்தான். அது தேவன்; இது மெல்கிசேதேக்கு.
யுத்தம் முடிந்ததும், மெல்கிசேதேக்கு தன்னுடைய ஜெயங்கொண்ட குமாரனுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தான்; தன்னையே ஒரு பங்காக அவனுக்கு கொடுத்தான் என்பதை கவனியுங்கள். இங்கே, ''அப்பம் பிட்குதல் ஒரு 'நிழலாக காட்டப்படுவதை நாம் கவனிக்கவேண்டும். யுத்தத் திற்கு பிறகு அவர்தம்மையே அவனுக்கு கொடுத்தார்; ஏனென்றால் அப்பம் பிட்குதல்கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கிறது. போராட்டத்திற்கு பிறகு தான் கிறிஸ்துவிலேபங்குள்ளவனாக இருந்து அவரில் ஒரு பாகமாக்கப்படுகிறாய். நீங்கள் இதை புரிந்துக்கொண்டீர்களா?
46யாக்கோபு இரவெல்லாம் போராடினான்; அவர் அவனை ஆசீர்வதிக்கும் மட்டும் அவன் அவரை விடவில்லை. அது சரி. ஜீவனுக்காக போராட்டம். யுத்தத்திற்குப் பிறகு தேவன் தம்மையே உனக்கு தருவார். அதுதான் அவருடைய உண்மையான அப்பம் பிட்குதலாகும். சிறிய அப்பமும் திராட்சரசமும் அதற்கு அடையாளமாக அமைந்துள்ளது. நீங்கள் போராடி தேவனுக்குள் ஒரு பாகமாக்கப்படவில்லை என்றால் அதில் பங்குக்கொள்ள கூடாது.
அந்த சமயத்தில் அப்பம் பிட்குதல் இன்னும் நியமிக்கப்படவில்லை. அதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் இயேசு கிறிஸ்து மரித்த பிறகு அப்பம் பிட்குதல் நியமிக்கப்பட்டது.
இந்த பூமிக்குரிய போராட்டம் முடிந்தபிறகு நாம் அவரை ஆகாயத்தில் சந்தித்து மீண்டுமாக அப்பம் பிட்குதலில் பங்கு பெறுவோம்; அதுதான் கலியாண விருந்து. இதை எடுத்துக்காட்டுவதற் காகத்தான் அவருடைய குமாரனாகிய ஆபிரகாம் வெற்றியுடன் திரும்பினபோது மெல்கிசேதேக்கு அவனை சந்தித்து அவனுக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்தான். ''இது முதல் இந்தத் திராட்சப் பழரசத்தை நவமானதாய் உங்களோடே கூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையன்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.''
47மறுபடியும் கவனியுங்கள், ஆபிரகாம் வீட்டிற்கு செல்வதற்கு முன் மெல்கிசேதேக்கு அவனை சந்தித்தான். இங்கே எவ்வளவு அருமையான ஒரு மாதிரி கொடுக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு பிறகு ஆபிரகாம் வீட்டிற்கு திரும்பி செல்லும் முன் மெல்கிசேதேக்கு அவனை சந்தித்தான்.
நாம் வீட்டிற்கு செல்வதற்கு முன் இயேசுவை ஆகாயத்தில் சந்திப்போம் அது சரி. நாம் அவரை ஆகாயத்தில் சந்திப்போம் என்று 2தெசலோனிக்கேயர் கூறுகிறது. ரெபேக்காள், ஈசாக்கை குளிர்ச்சியான வேளையில் வயல் வெளியில் சந்தித்தது ஒரு அழகான 'நிழலாக' அமைந்துள்ளது. நாம் அவரை ஆகாயத்தில் சந்திக்கிறோம். ''உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்த வர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. தேவ எக்காளம் தொனிக்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோம்.' என்று 2 தெலோனிக்கேயர் கூறுகிறது. எல்லா 'மாதிரி'களும் பூரணமாயிருக் கின்றன.
ஆகவே, அந்ததியாபனி - நீ மரித்த பிறகு அந்த தியாபனி ஆவிக்குரிய சரீரத்திற்குள் பிரவேசிக்கும்போது என்ன நடக்கிறது? மீட்கப்பட்ட சரீரத்தை எடுத்துச்செல்ல தியாபனி சரீரம் பூமிக்கு வருகிறது. நீ இங்கே இருப்பாயானால், கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்க அந்த சரீரத்தைப் பெற்றுக்கொள்ளு வாய்.
இந்த மெல்கிசேதேக்கு தேவனாயிராமல் வேறு யாராக இருக்க முடியும்?
48நம்முடைய வாழ்க்கை பிரயாணத்தில் முழு இரகசியத்தையும், நாம் மரித்தப் பிறகு எங்கே செல்லுகிறோம் என்னும் இரகசியத் தையும் இப்பொழுது தெளிவாகக் காண்கி றோம். இங்கே முன்குறித்தல் என்பதும் கூட தெளிவாகக் காணப்படுகிறது. இதைக் குறித்துப் போதிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள்.
தம்முடைய இரகசியத்தில் இருந்த நித்திய நோக்கத்தின் வெவ்வேறான கட்டங்களை இப்பொழுது அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். பரிபூரணமடைய மூன்று கட்டங்கள் இருக்கின்றன என்பதை கவனியுங்கள். உலகத்தை அவர் மீட்டுக்கொள்வதைப் போலவே, அவருடைய சபையையும் அவர் மீட்டுக்கொள்கிறார். அவர் மக்களை மூன்று கட்டங்களில் மீட்டுக் கொள்கிறார். இப்பொழுது கவனியுங்கள். முதலாவதாக லூத்தர் பிரசங்கித்த வண்ண மாக நீதிமானாக்கப்படுதல்; இரண்டாவதாக வெஸ்லி பிரசங்கித்த வண்ணமாக பரிசுத்த மாக்கப்படுதல்; மூன்றாவதாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அது சரி அதன் பிறகு எடுத்துக்கொள்ளப்படுதல் வருகின்றது.
அவர் உலகத்தை எப்படி மீட்டுக்கொண்டார்? அது பாவம் செய்த போது, முதலாவதாக அதை தண்ணீர் ஞானஸ்நானத்தினால் சுத்திகரித்தார். அடுத்தப்படியாக சிலுவையிலிருந்து தன் இரத்தத்தை அதன் மீது சிந்தினபோது அதைப் பரிசுத்தப்படுத்தி, அதை தன்னுடையது என்று அழைத்தார். அதன் பிறகு அவர் என்ன செய்தார்? எல்லா உலகத்தையும் உன்னிலிருந்து நீக்கின பிறகு அனல்மிக்க பரிசுத்த ஆவியின் அபிஷேகத் தினால் எல்லாவற்றையும் புதுப்பித்தார். அவர் உலகத்தையும் புதுப்பிப்பார். அது நெருப்பினால் எரிக்கப்பட்டு, அநேகமாயிரம் மைல் உயரத்தில் இருக்கும் கிருமிகளையும் அழித்து, முற்றிலுமாக சுத்திகரிக்கப்படும். பரிசுத்த ஆவியானவர் உன்னை ஆட்கொண்ட போது நீ கிறிஸ்து இயேசுவுக் குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருப்பதுபோல அப்பொழுது ஒரு புதிய வானமும் புதிய பூமியும் உண்டாயிருக்கும். எல்லாம் எவ்வளவு தெளிவாக்கப்படக் கூடுமோ அவ்வளவாக தெளிவாக்கப்பட்டிருக்கிறது. எல்லாம் மூன்று கட்டங்களில் அமைந்துள்ளன.
49இயற்கையான பிறப்பும் மூன்று கட்டங்களில் அமைந்துள்ளது. ஒரு கர்ப்பவதியான ஸ்திரீக்கு முதலில் என்ன நேரிடுகிறது? முதலில் என்ன வெளிப் படுகிறது? தண்ணீர். அடுத்தப்படியாக வெளிப்படுவது என்ன? இரத்தம். அதற்கடுத் தது என்ன? ஜீவன். தண்ணீர் இரத்தம், ஆவி.
ஒரு செடி வளரும்போது என்ன நடக்கிறது? முதலில் எது வருகிறது? தண்டு. அதற்கடுத்தது என்ன? பூ, அதற்கடுத்தது என்ன? மேல் தோலாகிய உமி. பிறகு தானியம் அதிலிருந்து வருகிறது. தானியம் உருவாகிறதற்கு முன் மூன்று கட்டங்கள் நிறைவேற வேண்டும்.
தேவன் அதை உறுதிப்படுத்துகின்றார். எது சரியான முறை யில் இருக்கிறதோ அதை தேவன் சத்தியம் என்று நிரூபிக் கிறார். மீட்பின் திட்டத்தில் முன் குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே கருதப்படுகிறார்கள் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் புரிந்துக்கொண்டீர்களா? நான் அதை மீண்டும் சொல்லட்டும். முன் குறிக்கப்பட்ட வர்கள் மாத்திரமே மீட்பின் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அநேகர் தங்களை மீட்கப்பட்டவர்களாக காண்பித்துக் கொள்ளலாம். ஆனால் முன்குறிக்கப் பட்டவர்கள் மாத்திரமே மீட்கப்படுவர். ஏனென்றால், மீட்கப்படுதல் என்றாலே ஆதி நிலைமைக்கு கொண்டு வரப்படுதல் என்றுதான் அர்த்தம். ஏதாகிலும் ஒன்று மீட்கப்படுவது என்றால் அதை அதன் ஆதி நிலைமைக்கு கொண்டு வருவதாகும். அல்லேலூயா! ஆகவே, முன் குறிக்கப்பட்ட வர்கள் மாத்திரமே மறுபடியும் கொண்டு வரப்படுவார்கள். ஏனென்றால் மற்றவர்கள் அவருடைய சிந்தையிலிருந்து வரவில்லை.
50ஆதியிலே அவருடன் நித்தியமாக இருந்திருக்கவேண்டும்.... நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று அவர் நினைத்தப்போதே நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொண்டீர்கள்....... நான் பிரசங்க பீடத்தில் நின்று பிரசங்கிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இந்த இரவிலே நீங்கள் ஆசனத்தில் உட்கார்ந்து கேட்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அப்பொழுதுதான் அவருடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாய் இருப்போம். வீட்டை விட்டு ஒருவன் வரும்போது அவருடைய நோக்கத்தை நிறை வேற்றத்தான் பூமிக்கு வருகிறான். அது சரியா? அந்த நோக்கம் முடிந்ததும் அவன் மீண்டும் மகிமைப்படுத்தப்பட்ட நிலைமைக்கு கொண்டு வரப்படுகிறான். அவனை பூரண வளர்ச்சியடைய செய்து அவன் மீண்டுமாககொண்டு போகப்படுகிறான்.
பவுலின் தலையை வெட்ட மக்கள் ஒருபீடத்தைக் கட்டின போது, அவன் “மரணமே, உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று அவன் கூறியதில் ஆச்சரியமில்லை. ''மரணமே, நீ எங்கே என்னை அலரவைக்க முடியும்? பாதாளமே, நீ எப்படி என்னை அடக்கி வைக்க முடியும்? நானோ நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறேன்'' என்றான். ஆமென் அவன் அதை அறிந்துக்கொண்டான். மரணம், நரகம், பாதாளம், ஒன்றுமே அவனை பிடித்து வைக்கமுடியவில்லை. நாம் நித்திய ஜீவனை பெற்றிருப்பதால் ஒன்றுமே நம்மை சேதப்படுத்த முடியாது. அவன் நித்திய ஜீவனால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருந்தான்.
51இது ஒரு பனித்துளியின் கதையைப் போல் இருக்கிறது. எனக்கு இரசாயனத்தைக் குறித்து அதிகம் தெரியாது. இருந்தாலும், காற்று குளிர்ச்சியடையும்போது அதிலிருக்கும் ஈரம் பனித் துளிகளாக விழுகின்றன என்று நினைக்கிறேன்.... இரவில் சீதோஷணம் குளிர்ச்சியாகும்போது ஆகாயத்தில் இருக்கும் ஈரம் பனித்துளி களாக பூமியின் மீது விழுகின்றன. அடுத்த நாள் காலையில் சூரியன் வருவதற்கு முன் இந்த சிறியதுளிகள் குளிரினால் நடுங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் சூரியன் வந்ததும் அவைகள் பிரகாசமடைந்து ஒளியை வீசுகின்றன. அவைகள் குதூகலிக்கின்றன. ஏன்? அவைகள் எங்கிருந்து வந்தனவோஅங்கே சூரியன் அவைகளை அழைத்துச் செல்லப்போகிறது. ஒரு கிறிஸ்தவனைக் குறித்த காரியமும் அவ்வாறே இருக்கிறது. அல்லேலூயா! நாம் தேவனுடைய சமூகத்தில் வரும்போது, நாம் எங்கிருந்தோ வந்தோம் என்றும் மறுபடியுமாக அந்த வல்லமையினால் அதே இடத்திற்கு போகிறோம் என்றும் நமக்குள் ஏதோ ஒன்று சொல்லுகிறதை நாம் அறிந்திருக்கிறோம்
அந்த சிறிய பனித்துளி பிரகாசமடைந்து ஒளி வீசி குதூகலிக்கின்றது, ஏனென்றால் அது மேலேயிருந்து வந்ததென்றும், சூரியன் மீண்டுமாக தன்னை அந்த இடத்திற்கு கொண்டு போகப்போகிறது என்பதையும் அது அறிந்திருக்கிறது.
ஒருவன் தேவனுடைய தன்மையா யிருந்து தேவனால் பிறந்து தேவ குமாரனோடு ஐக்கியம் கொள்ளும் போது, ஒரு நாளிலே அவன் இங்கிருந்து மேலே எடுத்துக்கொள்ளப்படுவான் என்பதை அறிந்துக்கொள்ளுகிறான். ''நான் பூமியிலி ருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லோ ரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளு வேன்“ ஆமென்!
52மெல்கிசேதேக்குக்கு மரியாள் ஏன் தாயாக இருக்கவில்லை என்பதை கவனியுங்கள். ஆகவே தான் அவர் அவளை 'தாய்' என்று அழைக்காமல் 'ஸ்திரீயே' என்று அழைத்தார். அவருக்கு பிதா இல்லை; ஏனென்றால் அவரே நித்திய பிதாவாக இருக்கிறார். உண்மையிலேயே அவருக்கு தாயில்லை. அவரே பிதாவாக இருந்தார். அவருக்கு பிதா இல்லை. ஒரு சமயம் ஒரு கவிஞன் இயேசுவை புகழ்ந்து இவ்வாறு கூறினான்.
நான் மோசேயுடன் பேசினேன் பற்றியெரிகிற முட்புதரிலே
நான் ஆபிரகாமின் தேவனும் பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமுமா யிருக்கிறேன்.
நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.
நானே முழு சிருஷ்டிப்பாய் இருக்கிறேன். இயேசு என்பது என்னுடைய நாமம்
(அது சரிதான்)
ஓ, நான் யாரென்பதை கூறுகிறீர்கள்? எப்பொழுது நான் வந்ததாக கூறுகிறார்கள்?
நீங்கள் என் பிதாவை அறிவீர்களா? அவர் நாமம் என்ன என்று சொல்வீர்களா?
(அல்லேலூயா )
அதுதான் பிதாவின் நாமம்! ஆம்“நான் என் பிதாவின் நாமத்தில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை.'' நிச்சயாக அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
53இந்த மெல்கிசேதேக்கு மாம்சமானார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக வந்தபோது தன்னை மனுஷ குமாரன் என்று வெளிப் படுத்தினார். மனுஷ குமாரன், தேவ குமாரன் தாவீதின் குமாரன் என்று குமாரரின் மூன்று நாமங்களில் அவர் வந்தார்.
அவர் பூமியின் மீது இருந்தபோது வேதவாக்கியத்தை நிறைவேற்ற வந்த ஒரு மனிதனாக இருந்தார். ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார்'' என்று மோசே கூறினான். ஆகவே, அவர் ஒரு தீர்க்கதரிசியாக வரவேண்டி இருந்தது. ''நான் ஒரு தேவகுமாரன்,''என்று அவர் கூறவேயில்லை. ''நான் மனுஷகுமாரன், மனுஷகுமாரனை விசுவாசிக்கிறீர்களா?“ என்று கூறினார். அவர் மனுஷகுமாரனாக இருந்தபடியால் அவர் அவ்விதம் சாட்சிக் கூற வேண்டியதாயிருந்தது.
அவர், குமாரனின் மற்றொரு நாமமாகிய தேவகுமாரன் என்னும் நாமத்தில் வந்திருக்கிறார். அதுதான் அதரிசனமான ஆவி.
அவர் திரும்ப வரும்போது தன்னுடைய சிங்காசனத்தை - ஸ்தாபிக்க தாவீதின் குமாரனாக வருவார்.
54அவர் இங்கே மாம்சத்தில் வந்திருந்த போது மனுஷகுமாரன் என்று அழைக்கப் பட்டார். இப்பொழுது, மனுஷகுமாரன், அந்த தீர்க்கதரிசி, என்று தம்மைத்தாமே அவர் உலகத்திற்கு எவ்விதம் தெரியப்படுத்தினார்?
ஒரு நாள், நான் பேதுருவையும் அவன் சகோதரனாகிய அந்திரேயாவையும் குறித்த ஒரு கதையை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்கள் மீனவர்களாய் இருந்தனர், அவர்களுடைய தகப்பனாகிய யோனா ஒரு சிறந்த விசுவாசியாக இருந்தான். ஒரு நாள் அவன் படகில் ஒருபக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு 'மகனே, நமக்கு மீன் தேவையாயிருந்தபோது நாம் எப்படி ஜெபித்தோம் என்பதை நினைத்துபாருங்கள்'' என்று கூறினான். (அவர்கள் வர்த்தக மீனவர்களாக இருந்தனர்).'யேகோவாவாகிய தேவனையே நம்முடைய ஜீவியத்திற்காக நம்பி இருக்கிறோம். நான் இப்பொழுது வயதானவனாக இருக்கிறேன்; பிள்ளைகளே, நான் அதிக நாட்களாக உங்களோடு இருக்க முடியாது. மேசியா எப்பொழுது வருவார் என்று அவர் வருகைக்காக காத்திருந்த உண்மையான விசுவாசிகள் எல்லாரோடும் எப்பொழுதும் இருந்திருக்கிறேன். எல்லாவிதமான கள்ளபோதகர்களும் தோன்றினார்கள். ஆனால் ஒரு நாளிலே உண்மையானவர் வரப்போகிறார்.'' என்றான். இந்த மேசியா வரும்போது, என் பிள்ளைகளே நீங்கள் ஏமாந்துவிடக்கூடாது. இந்த மேசியா வெறும் வேதபண்டிதராக இருக்கமாட்டார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார். ஏனென்றால் நாம் பின்பற்றிவரும் நம்முடைய தீர்க்கதரிசியாகிய மோசே அவ்விதம் உரைத்திருக்கிறார்.''
எந்த ஒரு யூதனும் தன்னுடைய தீர்க்கதரிசியை விசுவாசிப்பான். அவன் அவ்விதம் செய்ய போதிக்கப்பட்டிருக் கிறான். தீர்க்கதரிசி ஒரு காரியத்தைக் கூறும் போது அது சத்தியமாக இருக்கும். ''உங்களில் ஒரு தீர்க்கதரிசி இருப்பானாகில், கர்த்தராகிய நான் என்னை அவனுக்கு வெளிப்படுத்துவேன். அவன் உரைக்கும் காரியங்கள் நிறைவேறும்போது அவனுக்கு செவிசாய்த்து, அவனுக்கு பயந்திருப்பீர் களாக. ஆனால், அவன் கூறினக் காரியங்கள் நிறைவேறாமல் போனால் அவனுக்கு செவி சாய்க்க வேண்டாம்' என்று தேவன் உரைத்திருக்கிறார். ஆகவே அது தீர்க்கதரி சியை நிரூபிப்பதாக இருக்கிறது.
55ஆகவே, மோசே உண்மையிலேயே ஒரு நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தான். ''உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணு வார்; அவருக்கு செவிகொடுக்காதவன் எவனோ அவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போவான்“ என்று அவன் கூறியிருக்கிறான். அவன் தன் குமாரர்களைப் பார்த்து 'இப்பொழுது என் பிள்ளைகளே, எபிரேயர்க ளாகிய நாம் தேவனால் நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறோம் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்'' என்றான். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், இதை இழந்து விட வேண்டாம். மீண்டும் அவன் கூறினதாவது; ''மேசியா வரும்போது அவர் ஒரு தீர்க்கதரிசி மேசியாவாக வருவார். மல்கியா தீர்க்கதரிசி வந்து போனதிலிருந்து நானூறு ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. ஆனால், இவரோ ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்.
அவன் மரித்த பிறகு ஒரு நாள், சில ஆண்டுகள் கழித்து இவனுடைய மகனாகிய அந்திரேயா யோர்தான் நதிக்கரையிலே உலாவிக்கொண்டிருக்கும்போது, ''மேசியா உங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக் கிறார்'' என்று வனாந்திரத்திலே ஒரு மனிதன் கூறுவதைக் கேட்டான். வனாந்திரத்தில் எழுப்பப்பட்ட அந்தப் பெரிய கழுகு அங்கே பறந்துவந்து, “இப்பொழுதே மேசியா உங்கள் மத்தியில் இருக்கிறார். நாம் இன்னும் அவரை அறியவில்லை. இருந்தாலும் அவர் உங்கள் மத்தியிலே நின்றுக்கொண்டிருக்கிறார். நான் அவரை அறிந்துக்கொள்ளுவேன். ஏனென்றால் பரலோகத்தில் இருந்து வரும் அடையாளத்தை நான் காண்பேன்'' என்று கூறினான்.
ஒரு நாள் அவன் “இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என்றான்.
இவன் தன் சகோதரனை சந்தித்து, ''சீமோனே, நாங்கள் மேசியாவைக் கண்டோம், நீயும் வந்து பார்'' என்று அவனிடம் கூறினான்.
“ஓ, அந்திரேயா, நீ தவறாக புரிந்துக் கொண்டிருப்பாய்'' என்றான்.
''ஓ, நான் அதை அறிவேன், ஆனால் இந்த மனிதன் வித்தியாசமானவராக இருக்கிறார்“ என்றான் அந்திரேயா.
''அவர் எங்கிருக்கிறார்? அவர் எங்கிருந்து வந்திருக்கிறார்?'' “அவர் தான் நசரேயனாகிய இயேசு.''
“அந்த பொல்லாத சிறிய நகரிலிருந்தா?அவ்விதமான பொல்லாத அசுத்தமான இடத்திலிருந்து அவர் வரமாட்டார்.''
''நீ, வந்து பார்.''
ஒரு நாள் அவனை தன்னுடன் வரும்படி வற்புறுத்தினான். அவன் மேசியாவின் முன் நின்றபோது, இயேசு அங்கே நின்றுக் கொண்டு மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். இவன்அவர் முன்பாக சென்றபோது, அவர் இவனைப் பார்த்து “உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்றார். இது, அவரை மேசியா என்று அறிந்துக் கொள்ளஅவனுக்கு போது மானதாய் இருந்தது அவன், பரலோகத்தின் திறவுகோல்களை பெற்றுக்கொண்டான்! ஏன்? அவர் அவனை அதற்கு முன் அறிந்தி ருக்கவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். அவனையும், அவனுக்கு மேசியாவை எப்படி கண்டுகொள்வது என்பதை கற்பித்த அவனுடைய வயதான, பயபக்தியுள்ள தகப்பனையும் அவர் எப்படி அறிந்திருந்தார்?
56அங்கே, பிலிப்பு என்பவன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். ஓ, அவன் உண்மையாகவே எழுப்புதலடைந்தான். தன்னோடே வேதத்தை வாசித்து தியானித்த இன்னொருவனை அவன் அறிந்திருந்தான். அவன் மலைப்பக்கமாய்ச் சென்று அவனை அவனுடைய ஒலிவத்தோப்பிலே கண்டான். அவன் முழங்காற்படியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாக அநேக வேதப்பாடங்களை வாசித்திருந்தனர். அவன் ஜெபித்து முடித்த பிறகு அவனைப்பார்த்து “நாசரேத் ஊரானும் யோசேப்பின் குமாரனுமாகிய இயேசுவைக் கண்டோம். அவர்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மேசியா” என்று கூறினான்.
'பிலிப்புவே, நீ வழிதவறிப்போகவில் லையா?'' என்று நாத்தான்வேல் கூறினதை என்னால் கேட்க முடிகிறது.
''ஓ, இல்லவே இல்லை. நாம் இருவரும் வேதத்தை ஒன்றாக படித்திருக்கிறோமே, மேசியா எவ்வாறாக தோன்றுவார் என்பதை தீர்க்கதரிசி கூறியுள்ளார்!''
''அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்.''
“கையொப்பம் கூட போடத் தெரியாத சீமோன் என்னும் வயதான மீனவனை நீ அறிவாயா? அவனிடம் நீயும் மீன்வாங்கி யிருக்கிறாயே.''
''ஆமாம்',
“அவன் வந்தபோது, இந்த நசரேயனாகிய இயேசு அவனைப் பார்த்ததும் அவன் பெயர் சீமோன் என்று கூறி,”சிறிய பாறை“என பொருட்படும் பேதுரு என்னும் பெயரை அவனுக்கு மாற்றினார். மற்றும் அவனுடைய தந்தை யார் என்பதையும்கூறினார்.
“நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை வரக்கூடுமா?''என்று அவன் கூறினான்.
''அதைக் குறித்து நாம் பேச வேண்டாம். நீ வந்து பார்' அது நல்ல யோசனைதான். வந்து பார்.
ஆகவே, பிலிப்பு நாத்தான் வேலைக் கொண்டு வந்தான். அவன் வந்தபோது ஒரு வேளை இயேசு நின்று பேசிக்கொண்டிருந் திருப்பார்; அல்லது மக்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்திருப்பார். அவன் இயேசுவினி டத்தில் வந்தபோது, இயேசு அவனைப் பார்த்து “இதோ, கபடற்ற உத்தம இஸ்ர வேலன்” என்றார்.
57அவன் ஒரு இஸ்ரவேலனைப் போல ஆடை அணிந்திருந்திருப்பான் என்று நீங்கள் கூறலாம். ஓ, அது அவ்வண்ணமல்ல. எல்லா கிழக்கத்திய மக்களும் அவ்வாறே ஆடை அணிவார்கள். அவன் ஒரு சீரியனாகக் கூட இருந்திருக்கக்கூடும். அவனுடைய தாடியும், உடையும் மற்ற நாட்டு மக்களைப் போலவே இருந்தது.
அவனைப் பார்த்து “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்' என்றார், வேறு விதமாக கூறினால் ”ஒரு உத்தமமான, நேர்மையான மனிதன்
அது நாத்தான்வேலை அதிகமாக தொட்டது. ''ரபீ (ரபீ என்பதற்கு போதகர் என்று அர்த்தம்), நீர் எப்படி என்னை அறிவீர்? நான் ஒரு யூதன் என்பதை நீர் எப்படி அறிவீர்? நான் கபடற்ற உத்தமன் என்பதை நீர் எப்படி அறிவாய்?''
“பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்னே நீ மரத்தின் கீழே இருந்தபோது நான் உன்னைக் கண்டேன்'' என்று அவர் கூறினார். பதினைந்து மைல்களுக்கு அப்பால் நாட்டின் மறுபுறத்திலே, முந்தின நாளிலே பிலிப்பு நாத்தான்வேலை சந்தித்திருந்தான்.
அவன் என்ன கூறினான்? ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா.'' என பொருட்படும் பேதுரு என்னும் பெயரை அவனுக்கு மாற்றினார். மற்றும் அவனுடைய தந்தை யார் என்பதையும் கூறினார்.
58ஆனால் ஆசாரியர்களும், சுய நீதியுள்ளவர்களும் அவரைப் பார்த்து, 'இந்த மனிதன் பெயல்செபூல் என்றும், குறி சொல்லுகிறவன்“ என்றும் கூறினார்கள்.
''நான் இவைகளுக்காக உங்களை மன்னித்துவிடுகிறேன்...''என்று இயேசு கூறினார்.
அவர்கள் இதை வெளிப்படையாக சத்தமாக கூறவில்லை. ஆனால் தங்கள் இருதயங்களில் கூறிக்கொண்டார்கள். அவர் அவர்களுடைய எண்ணங்களையும் அறிந்திருந்தார். அது சரி. அவ்விதம் தான் வேதம் கூறுகிறது. நீங்கள் வேண்டுமானால் அதை மனோதத்துவம் என்றும் கூறலாம். ஆனால் அவர் அவர்கள் எண்ணங்களை அறிந்திருந்தார்.
''நான் இவைகளை உங்களுக்கு மன்னித்து விடுகிறேன். ஆனால் ஒரு நாளிலே பரிசுத்த ஆவியானவர் வந்து (அவர் போன பிறகு) இதே காரியங்களை செய்யப்போகிறார்; அவருக்கு விரோதமாக செய்யப்படும் காரியங்கள் இந்த உலகத்திலோ அல்லது மறு உலகத்திலோ மன்னிக்கப்படமாட்டாது என்று அவர் கூறினார். அது சரியா? (சபையார்“ஆமேன்'' என்கின்றனர் - ஆசி) இவைகள் யூதர்கள் மத்தியில் செய்தக் காரியங்கள்.
அதன் பிறகு ஒரு நாள் அவர் சமாரியாவுக்கு செல்லவேண்டியதாய் இருந்தது. நாம் அந்த ஸ்திரீயை கண்டோம். அல்லது அந்த...
59அதற்கு முன் அவர் 'அலங்கார வாசல் அண்டையில் சென்றபோது அங்கிருந்த ஒரு பிணியாளியின் நிலைமையை இயேசு அறிந்து அவனைப் பார்த்து “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போ” என்றுக் கூறினார். அவன் அவ்விதம் செய்து சுகம் அடைந்தான்.
அதைக் கண்ட யூதர்களில் சிலர் அவரை விசுவாசித்து ஏற்றுகொண்டார்கள்; மற்றும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை? அவர்கள் ஜீவனுக்கென்று முன்குறிக்கப்படவில்லை. அவர்கள் அவருடைய சிந்தையில் ஒரு பாகமாக இருக்கவில்லை.
அவர்கள் ஆசாரியர்களும், பெரிய மனிதர்களுமாக இருந்தார்கள் என்பதை நினைவு கூரவும். அந்த வேதபண்டிதர்கள், ஆசாரியர்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு குறையும் நீங்கள் காண முடியாது. இயேசு அவர்களைப் பார்த்து ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருந்து, அவனுடைய கிரியைகளை செய்கிறீர்கள்'' என்று கூறினார். ''நீங்கள் தேவனால் உண்டாயிருந்தால் என்னை விசுவாசிப் பீர்கள். நீங்கள் என்னை விசுவாசியா விட்டாலும், என்னுடைய கிரியைகளை விசுவாசியுங்கள்; அவைகளே நான் யார் என்று சாட்சி கூறுகின்றன.
இயேசு நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை செய்வான். அது சரியா? அதுதான் உண்மையான மெல்கிசேதேக்கு என்பதை கவனியுங்கள்.
60இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள். மூன்று ஜாதியான மக்கள் மாத்திரம் இருந்தனர். நான் காரியங்களை பிரித்துக் கூறுபவன் என நான் சொல்லியிருப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நான் அப்படித்தான் எல்லா கிறிஸ்தவர்களும் வேறுபட்ட வர்கள்தான்; நிறத்தின் வேற்றுமையல்ல, ஆனால் ஆவியின் வேற்றுமை. ஒரு மனிதனின் தோலின் நிறம் எந்த விதத்திலும் அவனை பாதிப்பதில்லை. அவன் பிறப்பிலே ஒரு தேவகுமரானாய் இருக்கிறான். ஆனால் கிறிஸ்தவனோ தேவன் கூறிய வண்ணம் அசுத்தமானவைகளை விட்டு பிரிந்திருக் கிறான். அவன், எது சரி, எது தவறு என்று அறிந்து அசுத்தமானவைகளை விட்டு பிரிந்திருப்பான்.
சமாரியர் வேறு ஜாதியினராக தனியாக பிரிக்கப்பட்டிருந்தனர். பூமியின் மீது மூன்று ஜாதியினர் மாத்திரமே இருந்தனர். நீங்கள் வேதத்தை விசுவாசிப்பீர்களென்றால்; சேம், காம், யாப்பேத் என்பவர்கள் மூலமாகவே மக்கள் பெருகினர். இவர்கள் தான் நோவாவின் மூன்று குமாரர்கள், நாமெல்லோரும் இவர்களிலிருந்து தான் உண்டாயிருக்கிறோம். அது சரிதான். இது நம் எல்லோரையும் ஆதாமிலிருந்து தோன்றினவர்களாக காண்பித்து நம்மெல்லாரையும் சகோதரர்களாக்குகிறது. ஒரே இரத்தத்தினால் தேவன் எல்லா ஜாதியினரையும் சிருஷ்டித்தார்'' என்று வேதம் கூறுகின்றது. இரத்தத்தின் வழியாக நாம் எல்லோரும் சகோதரர்களாக இருக்கிறோம். ஒரு கறுப்பு மனிதன் தன் இரத்தத்தை ஒரு வெள்ளை மனிதனுக்குள் செலுத்தகொடுக்க கூடும். அல்லது ஒரு வெள்ளை மனிதனின் இரத்தத்தை ஒரு கறுப்பு மனிதனுக்குள் செலுத்த முடியும். ஒரு வெள்ளைக்காரன் தன் இரத்தத்தை ஒரு ஜப்பானியனுக்கோ, மஞ்சள் நிறமுள்ள வனுக்கோ, ஒரு இந்தியனுக்கோ, சிவப்பு நிறமுள்ளவனுக்கோ அல்லது வேறு யாருக்கோ செலுத்தக் கொடுக்கக்கூடும். ஏனென்றால் நாம் எல்லோரும் ஒரே இரத்தத்திலிருந்து வந்தவர்கள். நாம் எந்த இடத்தில் ஜீவிக்கிறோமோ அதற்கேற்ப நம்முடைய நிறம் உண்டாயிருக்கிறது.
ஆனால் உலகத்திலிருந்து நாம் வெளியே வரும்போது தான் நாம் பிரிக்கப்படுகிறோம். அவர் இஸ்ரவேல் மக்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தது போல்.
61சேம், காம், யாப்பேத்தின் மூலமாக வந்த மக்கள் இருந் தார்கள். வம்ச வரலாற்றைபார்க்க நேரமிருந்தால் பண்டைய ஆங்கிலேயர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பதை அறிந்துக் கொள் ளலாம். சமாரியர்கள், பாதி யூதர்களும் பாதி புறஜாதி யாருமானவர்கள். யூதர்களும், பிலேயாமின் கள்ள உபதேசத்தின்படி மோவாபிய பெண்களை மணந்ததினால் பிறந்தவர்கள் தான் சமாரியர்கள். அவர்கள் யூதரும், புறஜாதியாருமாயிருந்தார்கள்.
பண்டைய ஆங்கிலேயர்களாகிய நமக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. நாம் எந்த மேசியாவையும் விசு வாசிக்கவில்லை. நாம் எந்த மேசியாவையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு பிறகு தான் நாம் சேர்க்கப்பட்டிருக்கி றோம்.
இயேசு, தனக்கு சொந்தமானதிலே வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் தம்முடைய சீஷர்களைப் பார்த்து, ''புறஜாதியினர் நாடுகளுக்கு செல்லாமல், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத் திற்குப் போங்கள்'' என்று கூறினார். அவர் தன்னை யூதர்களுக்கு முன்பாக மனுஷகுமாரனாக வெளிப்படுத் தினார் என்பதை கவனியுங்கள். அவர்கள் அவரை புறக்கணித்து விட்டார்கள்.
சமாரியர்கள் பாதி யூதரும், பாதி புறஜாதியாருமாய் இருந்தப்படியால், அவர்கள் மேசியாவின் வருகைக்காக காத்திருந்தார்கள்.
நாம் தேவ நம்பிக்கையற்றவர்களாய் இருந்து நம்முடைய முதுகின் மேல் பாரத்தை சுமந்தவர்களாக, விக்கிரகங்களை வணங்கி வந்த புறஜாதியாராக இருந்தோம்.
62ஒரு நாள் அவர் எரிகோவிற்கு போகும்போது சமாரியா வழியாக செல்ல வேண்டி இருந்தது என்று யோவான் நான்காம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். அவர் அவ்வாறு செல்லும்போது சீகார் என்னும் பட்டணத்தின் கிணற்றண்டையில் உட்கார்ந்தார். நீங்கள் எப்பொழுதாவது அங்கே சென்றிருப்பீர்களானால் அது பார்ப்பதற்கு ஒரு அழகான இடமென்பதை அறிவீர்கள். எல்லோரும் தண்ணீர் எடுத்து செல்லத்தக்கதாக அங்கே ஒரு பொதுவான நீரூற்று இருந்தது. பெண்கள் காலையிலே அங்கு வந்து தங்கள் குடங்களை நிறைத்து தலைகள் மீதும், இடுப்பின் மீதொன்றும் வைத்துக்கொண்டு, ஒரு துளி தண்ணீரையும் கீழே சிந்தாமல் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டே நிமிர்ந்து நடந்து செல்லுவார்கள். மக்கள் தண்ணீருக்காக அங்கே வருவார்கள்.
இந்த சம்பவம் பகல் சுமார் 11 மணி அளவில் நடந்தது. அவர் தம்முடைய சீஷர்களை ஆகாரம் வாங்கி வருவதற்காக பட்டணத்திற்குள்ளே அனுப்பி இருந்தார். அவர்கள் பட்டணத்திற்கு சென்றிருந்த போது.
63அநேக புருஷர்களை உடையவளாக இருந்த ஒரு ஸ்திரீ அங்கே வந்தாள். இக்காலத்தில் அப்படிப்பட்டவர்கள் சிகப்பு விளக்கு பகுதிபெண் விபச்சாரி என்று அழைக்கிறோம். இயேசு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, இந்த ஸ்திரீ ஏறக்குறைய 11 மணிக்கு அங்கு வந்தாள். காலையிலே கன்னிகையான பெண்கள் தண்ணீர் கொண்டு செல்ல வந்தபோது இவள் அவர்களுடன் வரமுடியவில்லை. அவர்கள் எல்லோரும் தண்ணீர் எடுத்து முடிக்கும்வரை இவள் காத்திருந்தாள். இப்பொழுது அப்படிப்பட்ட பெண்களுடன் மற்றவர்கள் பழகாதது போல் அக்காலத் திலும் இவ்விதமான பழக்கம் இருந்தது. இவள் இழிவாகக் குறியிடப்பட்டிருந்தாள். ஆகவே, இவள் தண்ணீர் எடுக்க தனிமையாக வந்திருந்தாள். அவள் தண்ணீர் மொள்ள தன்னுடைய குடத்தை கிணற்றிலே விட்டிருக்கும்போது
''ஸ்திரீயே குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா“என்று யாரோ ஒருவர் கேட்கும் சத்தத்தை அவள் கேட்டாள். இதுதான் மெல்கிசேதேக்கு; இதுதான் இயேசு, நேற்றைய அந்த மனுஷகுமாரன். அவள் திரும்பிப் பார்த்து அங்கு ஒரு யூதனைக் கண்டாள். அவள் அவரைப் பார்த்து ''ஐயா, நான் ஒரு சமாரிய ஸ்திரீயா யிருக்கிறேன். ஒரு யூதன் சமாரியரிடத்தில் எதையாகிலும் கேட்பது முறையல்ல. நீர் அவ்விதம் என்னிடத்தில் கேட்டிருக்கக் கூடாது; நம்மில் ஒருவருக்கொருவர் சம்பந்தம் கிடையாது'' என்றாள்.
அதற்கு அவர் ''உன்னிடத்தில் பேசுவது யாரென்று நீ அறிந்திருப்பாயானால், உன் தாகத்தை தீர்த்துக்கொள்ள நீ என்னிடத்தில் கேட்டிருப்பாய்'' என்றார்.
அதற்கு அவள் ''நீர் எப்படி தண்ணீர் மொள்ளமுடியும்? கிணறு ஆழமாயிருக் கிறது. உம்மிடத்தில் மொண்டுக்கொள்ள ஒன்றும் இல்லையே“ என்றாள்
அதற்கு அவர் ''நான் கொடுக்கும் தண்ணீரோ நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற ஜீவ தண்ணீராய் இருக்கிறது'' என்றார்.
அவளுடைய நிலைமையை அறிந்து கொள்ளுமட்டும் அவர் அவளுடன் பேசினார். பிறகு அவர் அவளிடம் என்ன கூறினார் என்பதை கவனியுங்கள்; ''நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா“ என்றார்.
அதற்கு அவள், “எனக்கு புருஷன் இல்லை” என்றாள்
அவர் அவளைப் பார்த்து, ''நீ உண்மையைக் கூறினாய், எப்படியெனில் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல. இதை உள்ளப்படி சொன்னாய்'' என்றார்.
அந்த ஸ்திரீக்கும் மற்ற ஆசாரிய கூட்டத்தாருக்கும் உள்ள வித்தியாசத்தை கவனியுங்கள். எல்லா ஆசாரியர்களும் ஒன்றாக சேர்ந்து தேவனை அறிந்திருந்த தைக் காட்டிலும் அவள் தேவனை அதிகமாக அறிந்திருந்தாள்.
64அவள் அவரை நோக்கி ''ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்பதைக் காண்கிறேன்'' என்றாள். ''நானூறு ஆண்டுகளாக எங்க ளுக்கு தீர்க்கதரிசியே இல்லை. இப்பொழுது மேசியா வருவார் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்“ என்றாள்.அதுதான் மேசியாவின் அடையாளம். ஏனென்றால் அவர் மனுஷ குமாரனாய் இருந்தார். ''அவர் வரும்போது இதைத்தான் அவர் செய்வார்; நீர் அவருடைய தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்'' என்றாள்.
அதற்கு அவர் ''நானே அவர் என்றார். வேறு யாரும் அவ்விதமாக கூற முடியாது.
அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்து விட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி; “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்: அவர் மேசியா தானோ?'' என்றாள்.
புறஜாதியாரின் கடைசிக்காலத்தில் அவர் இதையே செய்வதாக வாக்குரைத் திருக்கிறார் என்பதை நினைவுகூருங்கள்.
யூதர்கள் நாலாயிரம் ஆண்டுகளாக மேசியாவின் வருகைக்காக காத்திருக்க வேண்டியி ருந்தது. அவர் வரும்போது என்ன செய்வார் என்று நாலாயிரம் வருடங்களாக அவர்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களோ அவரை அடையாளம் கண்டு கொள்ளத்தவறிவிட்டனர். வேதவாக்கியங் களின்படியே அவர் தன்னை வெளிப்படுத் தினார். ஆவிக்குரிய சரீரத்தில் இருந்த அவர் மாம்சத்திலே வெளிப்பட்டு அவர்கள் மத்தியிலே வாசம் செய்தார். அவர்களோ அவரை அடையாளம் கண்டுகொள்ள தவறிவிட்டு அவருடைய கிரியைகளை பிசாசின் கிரியைகள் என்று கூறினர்.
65இப்பொழுது, அப்போஸ்தலர்களுக்கு பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளாக ரோமன் கத்தோலிக்க சபையின் வழியாக நாம் போதனை பெற்றிருக்கிறோம். ரோமன் கத்தோலிக்கச்சபை, கிரேக்ககத்தோலிக்க சபை, பிறகு லூத்தரின் காலம், பிறகு வெஸ்லியின் காலம், சபை இக்காலங்களின் வழியாகவந்து இப்பொழுது தொள்ளாயிரத் திற்கும் அதிகமான ஸ்தாபனங்களாக இருக் கின்றன. இந்த எல்லா காலங்களிலும் மக்கள் போதனையைப் பெற்றிருந்தார்கள்.
முடிவு உண்டாவதற்கு முன் சோதோம் கொமோராவின் நிலைமை மீண்டும் வரும் என்று அவர் வாக்குரைத்திருக்கிறார்.... 'சோதோமின் நாட்களில் நடந்தது போலவே மனுஷக்குமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).
'இன்னும் சிறிதுகாலம், உலகம் என்னை காணாது, நீங்களோ என்னை காண்பீர்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்“ அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
நீங்கள் பாருங்கள், சமாரியருக்கு, என்னுடைய கடந்த இரவு பிரசங்கத்தில் கண்டது போல், ஆகார் நிழலாயிருந்தான், பாருங்கள், தாறுமாறாக்கப்பட்ட ஒன்று, யூதர்கள் சாராளாயிருந்தார்கள், அல்லது சாராளை சார்ந்தோர்கள். ஆனால் புறஜாதியாரோ மரியாளிலிருந்து வந்தவர் கள், அந்த ராஜரீக வித்து, ஆபிரகாமின் ராஜரீக வித்து.
66இந்த கடைசி நாட்களில் இதே தேவன், இதே கிறிஸ்து , இங்கே வந்து தம்மை மனுஷகுமாரனாக வெளிப்படுத்துவார் என்று வாக்குரைக்கப்பட்டிருக்கிறது
ஏன்? அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் மேசியாவின் அடையாளத்தை தந்தபோது யூதர்கள் அதை கண்டுகொள்ள தவறியிருக்கும் போது, புறஜாதியார் தங்கள் உபதேசங்களில் கடைசியாக வேத சாஸ்திரங்களின்படி அவர்கள் செல்லுவதை அங்கீகரிப்பார் என்றால் அவர் அநீதியுள்ளவராக காணப்படுவார். அவர் முதலில் செய்த வண்ணமாக இப்பொழுதும் செய்யவேண்டும். ஏனென்றால் எபிரேயர் 13:8ல் அவர் மாறாதவராயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது.
மல்கியா 4ம்அதிகாரத்திலும் மற்ற வேத வாக்கியங்களிலும், சபையும் உலகமும் இப்பொழுதிருக்கிற நிலைமையில் இருக்கும் என்று வாக்குரைத்திருக்கிறார்.
இன்றைக்கு இருக்கும் உலகத்தை நோக்கிப்பாருங்கள். சோதோமின் நிலைமையை நோக்கிப் பாருங்கள். அநேக இடங்களில் பூமி அதிர்ச்சி உண்டாயிருப்ப தையும் மற்றும் உலகில் நிகழ்கின்ற காரியங்களையும் நோக்கிப் பாருங்கள், சபையானது பாபிலோனிய குழப்பத்திற்குள் சென்றிருப்பதை கவனியுங்கள். அதற்குள்ள தூதர்களை நோக்கிப் பாருங்கள்; ஓரல் ராபர்ட்ஸ் மற்றும் பில்லிகிரஹாம்.
எல்லா சபையின் காலங்களிலும் ஒரு தூதனாவது ஆபிரகாமின் பெயர் போன்று (Abraham) தன்னுடைய பெயர் 'ham' என்னும் பதத்தால் முடியுமாறு பெற்றிருக்கவில்லை. A-B-R-A-HA-M ஆபிரகாம் என்னும் ஆங்கில பெயரில் ஏழு எழுத்துக்கள் உள்ளன. G-R-A-H-A-M கிரஹாம் என்னும் ஆங்கில பதத்தில் ஆறு எழுத்துக்கள் உள்ளன. மனிதன் ஆறாம் நாளிலே சிருஷ்டிக்கப்பட்டான். ஆனால் ஏழு என்னும் எண் தேவனுக்குரிய எண்ணாக இருக்கிறது.
67சோதோமில் இருக்கும் மக்களை நோக்கிப்பாருங்கள். அங்கே அவர்களுடைய செய்தியாளர்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆபிரகாமுடைய ராஜரீக வித்து எங்கே இருந்தது? ''சோதோம் நாட்களில் நடந்ததுபோல''என்று சொல்லும்போது அதற்குரிய அடையாளம் என்ன? தேவன் மாம்சத்தில் வந்து தன்னை வெளிப்படுத்தினார். தன்னுடைய முதுகிற்கு பின்னால் இருந்த கூடாரத்திற்குள் இருந்த சாராள் தன்னுடைய இருதயத்தில் நினைத்ததை அவர் பகுத்தறிந்து கூறினார். புறஜாதியாரின் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்பட்ட கடைசி அடையாளம் அதுவே. தேவனுடைய கோபத்தினால் புறஜாதியாரின் ஆட்சியிலுள்ள இந்த முழு உலகம் அக்கினியால் அழிக்கப்படுவதற்கு முன் சபையானது அதின் கடைசி அடையாளத்தை பெற்றாகிவிட்டது. நீ இதை விசுவாசிக்கிறாயா? (சபையார் 'ஆமென்'' என்று கூறுகின்றனர்-ஆசி)
மெல்கிசேதேக்கு தன்னை ஒரு மனுஷ சரீரத்தின் அடையாளமாக வெளிப்படுத்தி னான்; அதன் பிறகு அவர் மாம்சமானார், இப்பொழுது, இந்த இரவிலே, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நீ இதை விசுவாசிக்கிறாயா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர்-ஆசி)
அப்படியென்றால், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கும் இந்த மெல்கிசேதேக்கு யார்? அவனுக்கு தகப்பனும் கிடையாது, தாயும் கிடையாது; அவனுக்கு நாட்களின் துவக்கமும் கிடையாது, நாட்களின் முடிவும் கிடையாது. அவன் ஆபிரகாமை சந்தித்தபோது எவ்விதமான அடையாளத்தை செய்தான்? அவர் மாம்சத்தில் வந்தபோது, கடைசி காலத்தில் அச்சம்பவம் மறுபடியும் நடக்கும் என்று கூறினார். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? நான் அதை விசுவாசிக்கிறேன்!
ஜெபிப்போமாக.
68அன்புள்ள தேவனே, நீர் நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறீர் என்று கூறும் வேத வாக்கியத்தை நான் விசுவாசிக்கிறேன். கர்த்தாவே, ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்பதை என் இருதயத்தில் உண்மையாக அறிந்திருக் கிறேன். அதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை; கர்த்தாவே, எதையும் சொல்லுவதற்கு நான் பயப்படு கிறேன். நீர் உம்முடைய ஊழியக்காரனின் இருதயத்தை அறிந்திருக்கிறீர்.
அநேக முறை, யுகாயுகமாய், நீர் காரியங்களை அனுப்பினபோது மக்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள். தேவன் செய்தக் காரியங்களுக்காக மனிதன் நித்தமும் அவரை துதிக்கிறான். அவர் என்ன மகத்தான காரியங்களை செய்யப்போகிறார் என்று எதிர்பார்க்கிறான். ஆனால், இப்பொழுது அவர் என்ன செய்து கொண்டி ருக்கிறார் என்பதை அறியாதவனாய் இருக்கிறான். யுகா யுகமாய் இவ்விதமாய் தான் நடந்து வருகிறது. ரோமன் சபை, ஏன் பரிசுத்த பெட்ரிக் தேவனுடைய தீர்க்கதரிசி என்பதை கண்டுக்கொள்ளத் தவறி விட்டது? ஜோன் ஆப் ஆர்க் (Joan of Ark) ஒரு பெண் தீர்க்கதரிசியாய் வந்தபோது, அவளைப் புரிந்துகொள்ளாமல், அவளை ஒரு பெண் மந்திரவாதி எனக் கருதி ரோமன் சபை ஏன் அவளை எரித்து விட்டது? பிதாவே, அது ஏற்கெனவே நடந்துவிட்டது. நீர் அதை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் மறைத்துவிட்டீர். நீர், ஆசாரியர்களைப் பார்த்து ''நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளை பளப்பளப்பாக மெருகேற்று கிறீர்கள்'' ஆனால் நீங்களே அவர்களை கொன்று அங்கே புதைத்திருக்கிறீர்கள் என்று சொன்னதில் ஆச்சரியமில்லை. அவர்கள் கடந்து போன பிறகு தங்களுடைய தவறை உணருகிறார்கள். கர்த்தாவே, நீர் என்ன உருவத்தில் வந்தாலும் அவர்கள் எப்பொழுதும் உம்மை துன்புறுத்துகிறார்கள்.
69தேவனே, இந்த இரவு நான் மறுபடியும் ஜெபிக்கிறேன். நாளை, நாங்கள் டுசான் (Tucson) செல்ல திட்டமிட்டிருக்கிறோம். உலகின் மற்ற பாகங்களிலும், மற்ற பட்டணங்களிலும் நான் பிரசங்கிக்க வேண்டும். ஆனாலும் தேவனே, வார்த்தை பிரசங்கிக்கப்பட்டதை கேட்டிராதவர்களும், அது அடையாளங்களினால் வெளிப்படுத்தப் பட்டதை கண்டிராதவர்களுமாகிய அந்நியர்கள் ஒரு வேளை இன்றிரவு இங்கே இருக்கக்கூடும்.
துவக்கத்திலே நான் உம்மை கேட்ட வண்ணமாக ...கிலெயோப்பாவும், அவனுடைய நண்பனுமாகிய, இவ்விரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுக்கொண்டிருக்கும்போது, நீர் புதரிலிருந்து வெளியே வந்து, உயிர்தெ ழுதலுக்குபின், அவர்களுடன் பேசி பிரசங்கித்தீர்... ''கிறிஸ்து இவ்விதமாய் பாடுபட்ட பிறகு மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ள மனதில்லாத மந்த இருதயம் உள்ளவர்களே'' என்று ஏன் அவர் கூறினார்? ஆனாலும் அவர்கள் அவரை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. அவர்கள் பிராயணம் செல்லும் இடமட்டும் உம்முடனே சென்றார்கள். ஆனாலும் உம்மை அறிந்துக் கொள்ளவில்லை.
அந்த இரவு உம்மை அவர்களுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்த பிறகு, நீர் சிலுவையில் மரிப்பதற்கு முன்செய்தது போலவே ஏதோ ஒன்றை நீர் செய்தீர். அப்பொழுது தான் அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்து என்பதை அறிந்துக்கொண்டார்கள். சில நொடிப்பொழுதில் நீர் திரைக்குள் சென்று மறைந்து விட்டீர் அவர்கள் தீவிரமாக ஓடி “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்” என்று சீஷர்களுக்கு அறிவித்தார்கள்.
பிதாவாகிய தேவனே, நீர் இன்னும் ஜீவனுள்ளவராக இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். நீர் ஜீவனுள்ளவர் என்பதை நான் அறிவேன். அநேகமுறை இதை நீர் எங்களுக்கு நிரூபித்திருக்கிறீர். கர்த்தாவே, இன்னும் ஒரு முறை எங்களுக்கு அதை செய்வீரா? உம்முடைய கண்களில் எங்களுக்கு கிருபை கிடைத்ததா னால் மீண்டும் ஒருமுறை அது நிகழ அருள் புரியும். நான் உம்முடைய ஊழியக்காரன். இவர்களும் உம்முடைய ஊழியக்காரர் களாய் இருக்கிறார்கள். கர்த்தாவே, நான் எவ்வளவாக கூறினாலும்... நான் ஐந்து இரவுகளாக கூறின ஐந்து செய்திகளைக் காட்டிலும், நீர் ஒரு வார்த்தை கூறுவீரா னால் அதுவே அதிக மகத்துவமானதாக இருக்கும். கர்த்தாவே, நான் மக்களுக்கு சத்தியத்தை போதித்தேன் என்பதை அவர்கள் அறியத்தக்கதாக நீர் பேசமாட்டீரா? தேவனே அருள் புரியும், இன்னும் ஒரு முறையாக இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென்.
70நான் உன்னை அறியேன்; சில மக்களை நான் அறிவேன். இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த சிறுவனை நான் அறிவேன் அங்கே உட்கார்ந்திருக்கும் பில் டெள் என்பவரை நான் அறிவேன் “இங்கே சகோதரன் ப்ளேர் (Brother Blair ), ரோட்னிகாக்ஸ் இருக்கிறார் கள். அங்கே பார்ப்பது கடினமாக இருக்கிறது. இந்தப் பக்கத்தில் இப்பொழுது இருக்கிறவர் களில் எனக்கு தெரிந்தவர்களில் ஒருவரை யும் நான் பார்க்க முடியவில்லை.
உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்றும், நான் உங்களுக்கு அந்நியனாக இருக்கிறேன் என்றும் உணருகிறவர்கள் இருபுறமும் உள்ளவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
உங்கள் குறைகள் எனக்கு சிறிதேனும் தெரியாது என்று நினைக்கிறவர்கள் உங்கள் கரங்களை உயர்த்துங்கள்.
இப்பொழுது உங்களைக் குறித்து நான் அறிந்துக்கொள்வது முற்றிலுமாக ஒரு கூடாத காரியமாய் இருக்கிறது. இல்லையென்றால் அது ஆவியின் வெளிப்படுத்தலினால் தான் வரவேண்டியதா யிருக்கிறது.
நான் கடந்த இரவுகளிலும், இந்த இரவிலும், அவர் மரித்துபோகவில்லை யென்றும், மல்கியா நான்காம் அதிகாரத்திலும், மற்றும் லூக்கா வாக்குரைத்திருக்கிற வண்ணமாக இந்தக் கடைசி நாட்களில் அவர் தம்முடைய மக்கள் மத்தியிலே மறுபடியுமாக மனித ரூபத்தில் தோன்றி மேசியாவின் அதே அடையாளங்கள் செய்துகாட்டுவார் என்றும் நான் கூறின வண்ணமாக அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். வேதாகமத்தை வாசிக்கிற மக்களாகிய உங்களில் எத்தனைபேர் அது சத்தியம் என்று அறிவீர்களோ அவர்கள் 'ஆமென்' என்று சொல்லுங்கள். (சபையினர் ஆமென் என்று பதில் உரைக்கின்றனர். நீங்கள் எல்லோரும் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
இப்பொழுது, இது மக்களுக்கு ஒரு புதுமையானதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் இதுதான் சத்தியம். இதே காரணத்தால்தான் அவர்கள் நசரேயனாகிய இயேசுவை அறியவில்லை. அவர்கள் தங்களுடைய சபையின் போதகத்தை அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அவரை அறியவில்லை. அவர், ஒரு ஆசாரியனோ அல்லது ஒரு வேத பண்டி தனோ கூறின வண்ணமாகவராமல், வேதாகமம் கூறின வண்ணமாகவே வந்தார். அவர் ஒருதீர்க்கதரிசியாக வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
71இப்பொழுது, தேவன் தம்முடைய வார்த்தையை காப்பார் என்றால் - அது எனக்கு தெரிந்தவர்கள் மேல் வரும் என்றால். எனக்கு தெரியாதவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புறேன். நீங்கள் ஜெபம் செய்ய வேண்டுகிறேன்.
ஒரு சமயம் தன் சரீரத்தில் குறையுள்ள ஒரு ஸ்திரீ இருந்தாள். அவள் தன் ஆஸ்தியை வைத்தியர்களுக்கு செலவு செய்தும், அவர்களால் அவள் வியாதியை குணப்படுத்த முடியவில்லை. அவள், ''நான் அந்த மனிதனுடைய அங்கியை மாத்திரம் தொட்டால் போதும், நான் சுகமடைவேன்'' என்று தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொண்டாள். அந்த கதையை நீங்கள் நினைவுகூருங்கள். அவள் அவரிடத்தில் நெருங்காதபடி எல்லோரும் அவளை பின்னே தள்ளிக் கொண்டிருந்தார் கள், ஆனால் அவளோ அவரின் அங்கியை தொடும் வரை மக்களை நெருக்கி சென்று அவரின் வஸ்திரத்தை தொட்டுவிட்டு பின்னாக வந்து விட்டாள்.
இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவள் அவருடைய வஸ்திரத்தை தொட்டவுடன், இயேசு திரும்பி பார்த்து, “என்னை தொட்டது யார்?' என்று கேட்டார்.
அப்போஸ்தலனாகிய பேதுரு அவரைக் கடிந்துகொண்டு ஒரு வேளை இவ்விதம் கூறியிருக்கக் கூடும்; ''ஆண்டவரே இவ்விதம் கூற வேண்டாம். உம்மில் ஏதோ குறை இருப்பதாக மக்கள் நினைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் நீர் அவர்களைப் பார்த்து உம்முடைய மாம்சத்தை புசித்து உம்முடைய இரத்தத்தை பானம்பண்ணு படியாக சொன்னபோது உம்மில் ஏற்கெனவே ஏதோ குறை உள்ளதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜனக் கூட்டமே உம்மை நெருக்கிக் கொண்டிருக் கும்போது ''என்னை யார் தொட்டது?' என்று கேட்கிறீரே?''
அதற்கு அவர் 'என்னிலிருந்து வல்லமை புறப்பட்டு சென்றதை நான் உணருகிறேன்'' என்றார். அது ஒரு வித்தியாசமான தொடுதலாக இருந்தது. அவரில் இருந்து சென்ற அந்த 'பண்பு (Virtue) வல்லமையாய் இருந்தது என்பதை யாராகிலும் அறிவீர்களா? வல்லமை என்னில் இருந்து சென்றதால் எனக்குள் பெலவீனத்தை உண்டாக்கி உள்ளது''
அவர் ஜனக்கூட்டத்தை சுற்றிபார்த்து அந்த சிறிய ஸ்திரீயை கண்டு பிடித்து அவளுக்கிருந்த பெரும்பாடு வியாதியைக் குறித்து கூறினார். அவளில் இருந்த பெரும்பாடு வியாதி தன்னை விட்டு நீங்கியதை தன்னுடைய சரீரத்தில் உணர்ந்தாள். அது சரியா? அவர் அவளைப் பார்த்து 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார்.
சோசோ “SOZO” என்னும் கிரேக்க வார்த்தைக்கு 'சரீரப் பிரகாரமாகவோ அல்லது ஆவியின் பிரகாரமாகவோ இரட்சிக்கப்படுதல்“ என்பது அர்த்தமாகும். இரண்டுமே இரட்சிக்கப்படுதல். அவர் உன்னுடைய இரட்சகர்.
72வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவாகிய அவர் தாம் மக்கள் மத்தியிலேயே இருப்பதை நேற்று அவ்விதம் நிரூபித்து காண்பித்தார் என்றால் இன்றைக்கும் அவ்விதமாகவே செய்து காட்டுவதாக வேதத்தில் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். இப்பொழுதும் அவ்விதமாக செய்கிறார். அவர் அவ்விதமான காரியத்தையே செய்யவேண்டுமல்லவா?
''பிணியாளிகள் சுகமடைவதைக் குறித்து அவர் அவ்விதம் கூறினாரா?'' என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம் இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பெலவீனங்களைக் குறித்து பரிதபிக்க கூடிய நம்முடைய பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்று நான் இப்பொழுது வாசித்த வேதாகமத்தில் உள்ள எபிரேயர் கூறுகிறது. எத்தனைபேர் அது சத்தியம் என்று அறிவீர்கள்? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர்- ஆசி ) அவர் நம்முடைய பெலவீனங்களைக் குறித்து நமக்காக பரிதபிக்க கூடிய பிரதானஆசாரியராய் இருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. இவர், அப்பொழுது இருந்த அதே பிரதான ஆசாரியராக இருக்கிறார் என்றால் இப்பொழுது எப்படி கிரியை செய்வார்? இவர், அதே பிரதான ஆசாரியராக இருப்பாரென்றால் அப்பொழுது கிரியை செய்தது போலவே இப்பொழுதும் கிரியை செய்யவேண்டும்.
நான் உங்களுடைய பிரதான ஆசாரியன் அல்ல. நீங்கள் என்னை தொட்டால் அது உங்கள் புருஷனையோ அல்லது உன்னுடைய சகோதரனையோ அல்லது வேறெந்த மனிதனையோ தொடுவது போலிருக்கும்.
73ஆனால், உங்கள் விசுவாசம் அவரைத் தொடும்படியாக செய்து, பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள். இப்பொழுது நான் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்து சத்தியத்தை உங்களுக்கு அறிவித்திருப்பேனானால் தேவன் தாமே அது சத்தியம் என்பதை நிரூபிப்பார். அது, அந்த இயேசுகிறிஸ்து இந்த இரவு ஜீவனுள்ளவராக இங்கே நின்று கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்கிறதாய் இருக்கும். அது சரியா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) இப்பொழுது உங்களுக்குள் விசுவாசம் ஒரு பக்கமாக இருக்கிறது. அங்கே இருக்கும் உனக்குள் விசுவாசம் இருக்கிறது. இங்கிருக்கும் ஒலிபெருக்கியினண்டையில் நின்று நான் அதைக் கூறினால் நலமாயிருக்கும் ஏனென்றால் நான் பேசுவது அவர்களுக்கு கேட்கலாம்.
யாராகிலும் தேவனை நோக்கிப் பார்த்து இவ்விதம் கூறுங்கள்: 'தேவனே, அந்த மனிதனுக்கு என்னை தெரியாது. அவருக்கு என்னைக்குறித்து ஒன்றும் தெரியாது. நான் அவருக்கு முற்றிலுமாக ஒரு அந்நியனாய் இருக்கிறேன். ஆனாலும் கர்த்தாவே, என்னுடைய விசுவாசம் உம்மை தொடட்டும். கர்த்தாவே, என்னில் உள்ள குறையை நீர் அறிந்திருக்கிறீர். நீர் என்னைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நீர், பேதுரு யார் என்பதை அறிந்திருந்தது போல, நாத்தான்வேல் யார் என்பதையும் பெரும் பாடுள்ள அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த குறையையும் நீர் அறிந்திருந்தது போல; நான் யார் என்பதையும் அறிந்திருக்கிறீர். நீர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறீர்என்று இந்த மனிதன் எனக்கு கூறுகிறார். அப்படியென்றால் ஆண்டவரே, என்னுடைய விசுவாசம் உம்மை தொடட்டும்“ அவர் இவ்விதம் செய்து, தாம் இங்கிருப்பதை தவறாத முறையில் நிரூபித்தால், குறைந்த பட்சம் அவர் ஒருவருக்கோ, அல்லது இரண்டு பேருக்கோ, அல்லது மூன்று பேருக்கோ ஒரு சாட்சியாக செய்து நிரூபித்தால், எத்தனைபேர் உங்கள் இதயப்பூர்வமாக அவரை விசுவாசிப்பீர்கள்? (சபையார் ”ஆமென்“என்கின்றனர்-ஆசி) தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
74இப்பொழுது பிதாவாகிய தேவனே, இது முற்றிலுமாக எந்த மனிதனுக்கும் அப்பாற்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது. இது ஒரு தெய்வீகமான காரியமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஆகவே, ஆண்டவரே இப்பொழுது நீர் எனக்கு உதவி செய்ய வேண்டுமாய் ஜெபிக்கிறேன். நான் உம்முடைய கரங்களில் இருக்கிறேன். எது தகுதியானதோ அதை எனக்கு செய்தருளும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
இப்பொழுதும், நீங்கள் கலவரப்படாமல், தாழ்மையுடனும், பயபக்தியுடனும் கர்த்தாவே, நான் உம்மை சேவிப்பேன். நான் உம்முடைய வஸ்திரத்தை தொடும்போது அந்த மனிதன் மூலமாக நீர் மறுபடியுமாக பேசுவீரானால் அது இவர் பேசினது சத்தியம் என எனக்கு நிரூபிக்கிறதாய் இருக்கும்'' என்று கூறுங்கள் அது சரியா?
அந்த ஒளியின் புகைப்படத்தை எத்தனை பேர் பார்த்திருக் கிறீர்கள்? அது எல்லா இடங்களிலும் இருக்கிறது. விஞ்ஞானம் அதை நிரூபித்திருக்கிறது. அது எங்குமிருக்கிறது. நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறவரும், 1933-ம் ஆண்டு நதியண்டையிலே இருந்தவரும், “விவாகமும் விவாகரத்தும்'' என்பதை அறிவித்தவரும், மலை மீது இருந்தவரும், அங்கிருந்த குன்றுகளை அசைத்தவருமாகிய அவரே இப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் மாறாதவராய் இருக்கிறார். (சகோதரன் பிரன்ஹாம் சற்று நிறுத்துகிறார் -ஆசி)
75இப்பொழுது நடந்த ஒரு காரியத்தை அறிந்துக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கிருக்கிறாள். அந்த ஒளி அவளுக்கு மேல் அமர்ந்திருக்கிறது. அவள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் பச்சை நிறமான அல்லது வேறெதோ மேலாடை அணிந்திருக்கிறாள். அந்த ஸ்திரீ எனக்கு தெரியாதவள் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். அது சரி. நீ தேவனை விசுவாசிக்கிறாயா? ஏதோ ஒன்று உனக்கு தேவைப்படுகிறது. உன்னுடைய குறை என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா? அவர் அவ்விதம் வெளிப்படுத்தும்போது, அது இயற்கைக்கு மேலான வல்லமையாய் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வாய், ஏனென்றால் உன்னை எனக்குத் தெரியாது. அது இயற்கைக்கும் அப்பாற்பட்டதின் மூலமாகவே வரவேண்டியதாக இருக்கிறது.
நீ அது என்ன என்பதை எவ்விதம் ஏற்றுகொள்கிறாயோ அதன் மீது தான் சார்ந்திருக்கிறது. நீ ஆசாரியரோடே சேர்ந்து கொண்டு இதை பிசாசு என்று கூறலாம். அல்லது விசுவாசிகளின் பக்கமாய் சேர்ந்துக்கொண்டு இதை தேவன் என்று கூறலாம். நீ எதை விசுவாசிக்கிறாயோ அதிலிருந்துதான் உன்னுடைய பலனும் வரும்.
தேவன் உன்னுடைய குறைவை எனக்கு வெளிப்படுத்துவார் என்றால் அவரை, அந்த குறையை நீக்கும் உன்னுடைய ''பாவ நிவாரணபலி' யாக ஏற்றுக்கொள்ளுவாயா? என்ன குறை என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று நிகழ்ந்துக் கொண்டிருப்பதை நீயும், நானும், அறிந்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பொழுது உன்னுடைய நிலைமையை நான் கூறட்டும், அப்பொழுது மெய்யாகவே ஒரு அருமையான, வெப்பமான, சுகமளிக்கும் உணர்வை பெறுவாய். நான் இப்பொழுது அதை நேராக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஸ்திரீயின் மேல் இருக்கும் மஞ்சள் நிறமான (AmberLight) ஒளிதான் அந்த ஒளி.
அந்த ஸ்திரீ தன்னுடைய வயிற்றில் ஒருவிதமான தொந்தரவு உள்ளவளாக இருக்கிறாள். அது அவளுடைய வயிற்றில் ஒரு விதமான கட்டியைப்போல் இருக்கிறது. அவள் இந்த பட்டணத்தை சேர்ந்தவள் அல்ல. (அது சரி என்று சகோதரி கூறுகிறார்கள்) நீ தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய், இல்லையா? அது சரிதான்! நீ விஸ்கான்சின் என்னும் இடத்திலிருந்து வந்திருக்கிறாய். அது சரியா? இது நிச்சயமாய் இருக்கிறது. இப்பொழுது நீ சுகமாக்கப்பட்டிருக்கிறாய். உன்னுடைய விசுவாசம் உன்னை சுகப்படுத்தியது.
இப்பொழுது, அந்த ஸ்திரீ யாரை தொட்டாள்? நான் அவளிடத்தில் இருந்து இருபத்தைந்து கெஜ தூரத்தில் இருக்கி றேன். அவள் பிரதான ஆசாரியராகிய இயேசுகிறிஸ்துவை தொட்டாள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?
76நான் பேசின அந்த ஸ்திரீயை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் இப்பொழுது நேரடியாக பார்த்துக்கொண்டிருக்கும் இந்த ஸ்திரீ ஒரு மனிதனுக்காக போராடி ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு மனிதனுக்காக வந்திருப்பதாகக் கூறினாள். அவள் அவரைக் குறித்து ஒன்றும் சொல்லவில்லை.ஆனால் அவள் பெயர் திருமதி. வால்ட் ரோப். அவள் பீனிக்ஸ் பட்டணத்தில் இருந்து வந்திருக்கிறாள். அவள் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டவள்.
அவளுடைய வைத்தியர் 'எக்ஸ்ரே' படத்தைக் கொண்டு வந்து இருதயத்தில் இருந்த புற்றுநோயை காண்பித்தார். அவள் ஜெப வரிசையில் இருக்கும்போதே மரித்துப்போனாள். திருமதி. வால்ட் ரோப். இது எவ்வளவு காலத்திற்கு முன் நடந்தது? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்த இரவு அவள் ஒரு ஜீவனுள்ள சாட்சியாக அங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாள். அவளுடைய வைத்தியர்கள் கூட்டத்திற்கு வந்தார்கள். ''அந்த ஸ்திரீ எப்படி ஜீவிக்க முடியும்?'' என்று கேட்டார்கள். அவள் அங்கே இருக்கிறாள். ஆனால் அவளில் எந்தவிதமான வியாதிக்குரிய அடையாளமும் காணப்படவில்லை.
அவள் யாரோ ஒருவரை கொண்டு வந்து அவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவர் '' நீரிழிவு வியாதியினால் மரித்துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது நான் அதை அறிந்துகொண்டேன். திருமதி வால்ட் ரோப் , அவர் யார் என்று எனக்கு தெரியாது என்பது உமக்கு தெரியும்.
அவர் மிஸ்ஸெளரி என்னும் இடத்தில் இருந்து வந்திருக் கிறார். அவருடைய பெயர் திரு. கூப்பர். என்பதாகும். அது சரியா? இப்பொழுது நீ விசுவாசிக்கிறாயா? ஐயா, நீர் வீட்டிற்கு போய் சுகமாய் இருங்கள். அது உன்னுடைய விசுவாசத்தை பொருத்திருக்கிறது.
77இங்கே ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் ஒரு சிக்கலான ஆஸ்துமா வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் இந்த இடத்தை சேர்ந்தவளல்ல. அவள் அங்கே அந்த கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இந்த இடத்தை சேர்ந்தவளாக இல்லாமல் ஜார்ஜியா என்னும் இடத்திலிருந்து வந்திருக்கிறாள். குமாரி. மெக்கென்னி, தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? நீ எனக்கு தெரியாத ஒரு அந்நிய ஸ்திரீயாக இருப்பாயானால் எழுந்து காலூன்றி நில், அது சத்தியம். இயேசுகிறிஸ்து உன்னை சுகப்படுத்து கிறார். நீ அதை விசுவாசிக்கிறாயா?
எனக்கு பின்னால் ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக் கிறார். அவர் தேவனை தொட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய தேவை என்ன? இருதய கோளாறாக உள்ள ஒரு குழந்தை அவருக்குண்டு. அந்த குழந்தையின் இருதயத்திலிருந்து ஒரு விதமான மெல்லிய சத்தம் வந்துக்கொண்டிருக்கிறது. அந்த மனிதனின் பெயர் திரு. காக்ஸ் என்பதாகும். திரு.காக்ஸ் எழுந்து நில்லுங்கள். கர்த்தர் நம் முதுகிற்கு பின்னால் இருந்த சாராள் தன் உள்ளத்தில் நினைத்ததை கூறினார். (சகோதரன் பிரான்ஹாம் தமது முதுகுபுறம் சபையாரை நோக்கி இருக்கும் வண்ணமாக தொடர்ந்து நிற்கின்றார்- ஆசி)
அவருக்கு சற்று பின்னால் ஒரு மனிதன் இருக்கிறார். அவர் இந்த இடத்தை சேர்ந்தவரல்ல, ஆனால் நியூமெக்சிகோ என்னும் இடத்தில் இருந்து வந்திருக்கிறார். நான் என் வாழ்க்கையில் அவரை பார்த்ததே கிடையாது. நான் இப்பொழுது அவரை நேராக பார்த்துக்கொண்டிருக்கிறேன்; அவர் எனக்கு பின்னாக இருக்கிறார். இவர் நியூமெக்சிகோ என்னும் இடத்திலிருந்து வந்திருக்கிறார். அவர் அக்கறை கொண்டுள்ள ஒரு பெண் அவரிடம் இருக்கிறாள். அந்த பெண் வாயில் ஏதோ கோளாறு இருக்கிறது. அவருடைய மேல் வாயில் தான்அந்த கோளாறு இருக்கிறது. அந்த மனிதனின் பெயர் திரு. வெஸ்ட் என்பதாகும். ஐயா, நீர் எழுந்து நிற்பீரா? நான் அவருக்கு முற்றிலும் ஒரு அந்நியனாக இருக்கிறேன். ஆனால் தேவனாகிய கர்த்தர் அவருடைய குழந்தையை சுகப்படுத்துவார்.
78இப்பொழுது உன் முழு இருதயத்தோடும் நீ அதை விசுவாசிக் கிறாயா?
இப்பொழுது எத்தனைப் பேர் அவரை முழு மனதோடு விசுவாசிக்கிறீர்கள்? இப்பொழுது எத்தனைபேர் உங்கள் முழு மனதார விசுவாசிக்கிறீர்கள்? (சபையார் ''ஆமென்“ என்கின் றனர் - ஆசி) இப்பொழுதும், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார் அல்லவா? ஆமென் இப்பொழுது நீங்கள் அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுகொள்ளுகிறீர்களா? உங்களுடைய கைகளை உயர்த்துங்கள். 'ஆமென்” அவர் உங்களை சுகப்படுத்துகிறவர் என்று விசுவாசிக்கிறீர்களா?
இங்கே ஒருவர் முடவனாகவோ அல்லது வேறு காரண மாகவோ கட்டிலில் கிடக்கிறார். (இந்த ஒலி பெருக்கி மூலமாக நீர் என்னை கேட்கமுடிகிறதா?) சகோதரன் பிரன்ஹாம் ஒலிபெருக்கியை கையில் எடுத்துக்கொண்டு பிரசங்க மேடையில் ஓரமாக சென்று கட்டிலில் இருக்கும் பெண்ணிடம் பேசுகின்றார் - ஆசி) நீர் யார் என்று எனக்கு தெரியாது. அங்கே படுத்துக்கொண்டு இருப்பது ஒரு ஸ்திரீ . நான் உன்னை சுகப்படுத்த கூடுமானால் உன்னை சுகப்படுத்துவேன். ஆனால், நான் உன்னை சுகப்படுத்த முடியாது.
இங்கே ஒருவர் தன்னுடய மகனுக்காக களிகூருகின்றார். அவருடைய குழந்தை சுகமாக்கப்பட்டது. உன்னை எனக்குத் தெரியாது. நீர் ஒரு ஸ்திரீ; நான் ஒரு மனிதன். வாழ்க்கையில் இதுதான் முதல் முறையாக நாம் சந்தித்திருப்பது என்று நினைக்கிறேன். நீ இங்கே வந்திருப்பது இதுதான் முதல் தடவையாகும். வெகுதூரத்தில் இருந்து நீ வந்திருக்கிறாய். நீ மரிக்கும்படியாக நிழலிடப்பட்டிருக்கிறாய். உனக்கு புற்றுநோய் இருக்கிறது. நீ முடமல்ல, ஆனால் புற்றுநோய் இருக்கிறது. இனி வைத்தியர்கள் உனக்கு ஒன்றும் செய்ய முடியாது. இது நிச்சயம். நீமரிக்கப்போவது நிச்சயம். அந்த வைத்தியர்கள் உனக்கு ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு சமயம் மூன்று குஷ்டரோகிகள் சமாரியாவின் வாசலண்டையில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் ஒருவரை யொருவர் பார்த்து ''நாம் சாகுமட்டும் ஏன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கவேண்டும். குழந்தைகள் பட்டினியால் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியோரோ, ஒருவனுடைய குழந்தையை மற்றவர் தின்றுக்கொண்டிருக்கிறார்கள்'' என்று இவ்விதம் கூறிக் கொண்டார்கள். எதிரிகளாகிய சீரியருடைய பாளயத்திற்கு போவோம். அங்கே அவர்கள் நம்மை கொன்று போட்டால் கொன்று போடட்டும். நம்மை உயிரோடு வைத்தால் உயிரோடு வைக்கட்டும். எங்கிருந்தாலும் நாம் சாகப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் அந்த தருணத்தை உபயோகப்படுத்திக் கொண்டார்கள். அந்த விசுவாசத்தினால்.அவர்கள் தங்களை மாத்திரம் இரட்சித்துக் கொள்ளாமல் முழு நாட்டையுமே இரட்சித்துக்கொண்டார்கள்.
இப்பொழுது, நீ மரிக்கப் போகின்றாய்; நீ உயிருடன் இருக்கமுடியாது. நீ கிதியோனுடைய பாளையத்திற்கு செல்ல வேண்டுமென்று உனக்கு சொல்லாமல், நீ பிதாவினுடைய வீட்டிற்கு அழைக்கப்பட்டிருக்கிறாய்..?
79நீ புற்றுநோயினால் மரித்துக்கொண்டிருக்கிறாய்; நீ தேவனுக்கு புறம்பே ஜீவிக்க முடியாது. நீ இந்த பட்டணத்தை சேர்ந்தவளல்ல. இங்கு இருக்கும் சுற்றுப் பட்டணங்களில் இருந்தும் நீ வரவில்லை; நீ வெகு தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறாய். மில்வாக்கி என்னும் இடத்தில் இருந்து வந்திருக்கிறாய். இது உண்மை ! அங்கிருந்து தான் வந்திருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். அது சரிதான்.
நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது தேவனை உன்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுவாயா? நீ விசுவாசிப்பா யானால், நீ எவ்வளவு பெலவீனமாக இருந்தாலும் சரி, எவ்வளவுபடுத்த படுக்கையாக இருந்தாலும் சரி, உன்னுடைய விஷயத்திலே நீ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே எழுந்து உன்னுடைய கட்டிலை எடுத்துக்கொண்டு உன் வீட்டிற்கு போய் தேவனுடைய மகிமைக்காக ஜீவி என்று சொல்லத்தக்கதாக இப்பொழுது உன்னை நான் எழுப்புவேன் என்று விசுவாசிக்கிறேன். நான் தேவனுடைய தீர்க்கதரிசி எனும் விதத்தில் நீ எனக்கு கீழ்ப்படிவாயா? அப்படியானால் நீ எழுந்து உன் வீட்டிற்கு போ. சுகமாயிரு. பயப்படவேண்டாம்! கட்டிலில் இருந்து எழுந்திரு. தேவன் உன்னை சுகப்படுத்துவார்.
யாராகிலும் ஒருவர், அவள் எழுந்து நிற்கவும் பெலப்படவும் அவளை பிடித்துக்கொள்ளுங்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாயா? அவள் இன்னும் கொஞ்சம் பெலனை பெற்றுக்கொள்ளட்டும். அவள் பூரண சுகமாகிவிடுவாள். சகோதரியே, அவ்விதமாகத்தான். அங்கே, அவள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் பூரண சுகத்துடன் நிற்கிறாள். (அந்த சகோதரி எழுந்து நிற்கையில் சபையார் களிகூருகிறார்கள் - ஆசி). நாம் எழுந்திருந்து தேவனுக்கு துதி செலுத்துவோமாக. அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. (சபையார் மிகவுமாக களிகூர்ந்து தேவனை துதிக்கின்றார்கள் - ஆசி)